27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
pickastoneanddiscoverwhatitrevealsaboutyou
ஆரோக்கியம் குறிப்புகள்

ஒரு கல்லை தேர்ந்தெடுங்கள்! உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்லறோம்!

நமது மனதில் உள்ள விஷயங்களை பொருத்து தான் நமது ரசனை, நாம் எந்த பொருளை தேந்தெடுக்கிறோம் என்பது எல்லாம் அமையும். இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனைகள், விருப்பு, வெறுப்புகள் இருக்கும் இதனை மையமாக வைத்து நமது வாழ்க்கையில் உள்ள நிறை, குறைகளை அறியலாம்.

இந்த கற்களை பார்ப்பதற்காக சிறிதளவு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.. மிகவும் அதிகமாக ஆழ்ந்து யோசிக்காமல் உங்களது மனதிற்கு பிடித்தமான ஒரு கல்லை செலக்ட் செய்யுங்கள்.

உங்களுக்கு பிடித்தமான கலரின் அடிப்படையில் கல்லை தேர்வு செய்வது கூடாது. உங்களை இதில் எந்த கல் கவர்ந்ததோ அதனை தான் தேர்வு செய்ய வேண்டும். தன்னம்பிக்கையுடன் கல்லை தேர்வு செய்யுங்கள்.. இரண்டாம் வாய்ப்பை எடுத்துக் கொள்ளாதீர்கள்.. இப்போது நீங்கள் தேர்வு செய்த கற்களுக்கான பலன் என்ன என்று இந்த பகுதியில் காணலாம்.

#1 முதல் கல்

இந்த முதலாம் கல்லானது அதிக சக்தியை எடுத்துக் காட்டுகிறது. இந்த கல் தியானத்திற்கு உகந்த ஒரு கல்லாகும். இது மற்றவர்களுடனான தொடர்பினை வலிமையாக்குகிறது.

நீங்கள் இந்த கல்லை தேர்வு செய்திருந்தால், நீங்கள் பல விதங்களில் பார்க்கும் போது வலிமையானவர்களாகவும், நிறைய அனுபவங்களை பெற்றவர்களாகவும் இருப்பீர்கள்..

தனிமை

நீங்கள் சில விஷயங்களை விட்டுவிட்டு, தனிமையான இடத்திற்கு சென்று உங்களது ஆழ்மனது ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.. நீங்கள் நிரந்தரமில்லாத சில விஷயங்களுக்காக பயப்பட தேவையில்லை.. உங்களது கஷ்டங்கள் எல்லாம் மிக சீக்கிரமாக மறைந்து போய்விடும்.

நீங்கள் தன்னபிக்கையான மற்றும் மெல்லிய மனம் படைத்த ஒரு நபராக இருப்பீர்கள்… நீங்கள் உங்களது உழைப்பை நம்பி வாழ கூடிய ஒருவராக இருப்பீர்கள்..!

#2 இரண்டாவது கல்

இந்த அழகான பச்சை நிற கல்லானது பசுமையான மரங்கள் மற்றும் இயற்கையை குறிக்கிறது. இது மாற்றத்திற்கான ஒரு கல்லாகும். இந்த கல் ஆன்மீக வழியில் வளர்ச்சியை தரக்கூடிய ஒன்றாகும்.

மாற்றங்கள்

இந்த கல்லை தேர்ந்தெடுத்த உங்களுக்கு வாழ்க்கையில் பல உயர்வுகள் கிடைக்கும். உங்களது வாழ்க்கையில் பல முக்கியமான மாற்றங்களுக்கு இது காரணமாக இருக்கும். நீங்கள் உங்களது காதல் வாழ்க்கையிலும் பல மாற்றங்களை சந்திப்பீர்கள். உங்களது வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் உங்களை அறியாமலேயே நடந்து முடிந்துவிடும்.

#3 மூன்றாவது கல்

நீங்கள் தேர்ந்தெடுத்த இந்த கல்லானது, சுதந்திரம் மற்றும் தனித்துவத்தை வெளிக்காட்டுகிறது. இது உள்ளே இருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வர உதவும் ஒரு கல்லாக இது உள்ளது.

இனிமை

உங்களது வாழ்க்கை மிகவும் இனிமையானது.. உங்களது எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும். உங்களது தன்னம்பிக்கையை எந்த நிலையிலும் கைவிடாமல் இருந்தால் வெற்றி உங்களுக்கு சொந்தமாகும். இந்த உலகத்தில் மகிழ்ச்சியை தவிர, கவலை, மன அழுத்தம் போன்ற சில விஷயங்களும் இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

திட்டமிடல்

நீங்கள் உங்களது வாழ்க்கையில் எதை எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அனைத்து நாட்களும் உங்களுக்கு சாதகமானதாகவே இருக்காது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் உங்களது வாழ்க்கை இன்பமயமானதாக இருக்கும்.

#4 நான்காவது கல்

நீங்கள் தேர்தெடுத்த கல்லானது வலிமையையும், மன உறுதியையும் கூறிக்கிறது. உங்களது வாழ்க்கையில் பல வெற்றிகள் உங்களை தேடி வரும். மிகுந்த அதிஷ்டசாலிகளாக நீங்கள் இருப்பீர்கள். சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களது மனதில் இருக்கும்…

மகிழ்ச்சி

இருக்கும் வரையில் இந்த உலகில் உள்ள அனைத்து சந்தோஷங்களையும் அனுபவித்து விட வேண்டும் என்று நினைப்பீர்கள்.. உங்களது எதிரிகளிடம் கடுமையானவர்களாகவும், உங்களது முடிவில் தீர்க்கமானவர்களாகவும் இருப்பீர்கள். மனதில் பட்டதை நேருக்கு நேர் பேசிவிட கூடிய தன்மை கொண்டவர்களாகவும் இருப்பீர்கள்..

கட்டுப்பாடு

கோபம் என்பது உங்களது குணம் என்றாலும், சில சமயங்களில் உங்களது கோபம் நியாயமற்றதாகவும் இருக்கும். எனவே இது போன்ற நியாயமற்ற கோபங்களை குறைத்துக் கொண்டால் உங்களது வாழ்க்கையில் உறவுகள் மேம்படும்…! உங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள்.. எந்த ஒரு விஷயத்திலும் பரிபுரணமாக முயற்சி செய்யும் திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள்.

#5 ஐந்தாவது கல்

இந்த கல்லானது உங்களது தியானத்திற்கான ஒரு கல்லாக கருதப்படுகிறது. இது உங்களது மனதை ஒருநிலைப்படுத்தும் கல்லாகும். நீங்கள் உங்களது சிந்தனையை அங்கும் இங்கும் அலை பாயவிடாமல் ஒரே நிலையாக வைத்திருந்தால் வெற்றி உங்களுக்கு சொந்தமானதாகும் என்பதில் எந்த விதமான ஐய்யமும் கிடையாது.

அனுபவம்

குடும்பத்தினையும் சொந்தங்களையும் மதிக்க கூடிய ஒரு நபராகவும்.. அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடக்க கூடிய ஒரு நபராகவும் நீங்கள் இருப்பீர்கள். புது புது விஷயங்களை அனுபவிப்பது என்பது உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். அதுமட்டுமின்றி புதுப்புது இடங்கள் மற்றும் புதுப்புது சூழ்நிலைகளை அனுபவிக்க நீங்கள் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள்..

புரிதல்

வாழ்க்கையில் உள்ள வளைவு நெழிவுகளை பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.. நண்பர்கள் உங்களது வாழ்க்கையில் முக்கிய பங்கினை வகிப்பார்கள். உங்களுக்கு சுய சிந்தனையும், படைப்பாற்றாலும் அதிகமாக இருக்கும்.

#6 ஆறாவது கல்

நீங்கள் தேர்ந்தெடுத்த இந்த கல் வலிமையையும் மன உறுதியையும் குறிக்கிறது. உங்களுக்கு புதிய நண்பர்களை உருவாக்கி கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும். புதுப்புது திகிலான விஷயங்களை செய்வது என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களது குழந்தை பருவம் மிகவும் அழகானதாக இருந்திருந்திருக்கும்..

பிரச்சனைகளை மறக்கவும்

நீங்கள் உங்களது கடந்த கால பிரச்சனைகள், காயப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் போன்றவற்றை மறந்து நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது என்பது அவசியமாகும்.

பெருமை

பல சமயங்களில் நீங்கள் உங்களது மனதிற்குள் அன்பு, கருணை, பாசம் போன்றவை இருந்தாலும் கூட, கோபமாக தான் வெளியில் மற்றவர்களிடத்தில் பேசுவீர்கள்.. உங்களது வாழ்க்கையில் பல சந்தோஷமான விஷயங்களும், நினைத்து நினைத்து பெருமையடைய கூடிய விஷயங்களும் நடக்கும். எனவே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.

Related posts

உடலுக்கு ஆரோக்கியமான ஹர்பல் டீ…!

sangika

பழங்களை தோலுடன் சாப்பிடுவது உங்களை பலவகை புற்றுநோய்களில் இருந்து காப்பாற்றுமாம்

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறிதளவு பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

காலத்திற்கு முந்தி பெண்கள் பருவமடைவதால் ஏற்படும் பாதகங்கள்

nathan

இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழல் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது……

sangika

திபெத்திய மக்களின் வெள்ளையான மற்றும் வலிமையான பற்களின் ரகசியம் என்ன தெரியுமா?

nathan

முதல் இரவு பழக்கவழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் தெரிந்து கொள்ளலாம்.

nathan

நுகரும் திறனை வைத்து உங்கள் வாழ்நாளை எப்படி கணக்கிடுவது என உங்களுக்கு தெரியுமா??

nathan

சூப்பர் டிப்ஸ்! கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு இந்த முறையில் செய்து பாருங்க

nathan