27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
13 153
ஆரோக்கிய உணவு

சூப்பரான பச்சை பப்பாளி சாலட்! உடல் எடையை குறைக்கும்

பச்சை பப்பாளியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர 1 மாதத்தில் குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

தேவையான பொருட்கள்

பப்பாளிக்காய் – ஒன்று (சிறியது)
கேரட், வெங்காயம் – தலா ஒன்று
சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பூண்டு – 2 பல்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலைப்பொடி, – 2 டேபிள்ஸ்பூன்
வறுத்த வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப ஆரோக்கியமான சாலட் வகைகள்

செய்முறை

பப்பாளிக்காய், கேரட், வெங்காயம் ஆகியவற்றை நீள நீளமாக மெல்லிய குச்சி போல வெட்டி ஒரு பெரிய பவுலில் போடவும்.

ஒரு பாட்டிலில் வேர்க்கடலைப் பொடி, ஆலிவ் ஆயில், சோயா சாஸ், நறுக்கிய பூண்டு, உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ் ஆகியவற்றைப் போட்டு, மூடியைக்கொண்டு மூடி, நன்றாகக் குலுக்கவும்.

இதுதான் சாலட் டிரெஸ்ஸிங். இந்த டிரெஸ்ஸிங்கை நறுக்கிய காய்கறிகளுடன் கலந்து, வறுத்த வெள்ளை எள்ளை அதன் மேலே தூவிப் பரிமாறவும். சூப்பரான பச்சை பப்பாளி சாலட் ரெடி.

Related posts

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணி பெண்கள் இறாலை சாப்பிடலாமா.?!

nathan

மருத்துவ பயன்கள் நிறைந்த அரைக்கீரை!!

nathan

தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்க

nathan

அசிடிட்டி பிரச்சனைக்கு வாழைத்தண்டு மோர்

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்

nathan

உங்களுக்கு தெரியுமா பலாப்பழச் சுளையை சாப்பிடுவதால் நம் உடலில் நடக்கும் அற்புதங்கள்!!

nathan

சூப்பரான நாட்டு காய்கறி கூட்டு

nathan

உங்களுக்கு தெரியுமா வைட்டமின் பி 3 சத்துகள் உடலுக்கு ஏற்படுத்தும் நன்மைகள்!

nathan

ப்ராக்கோலி பொரியல்

nathan