போகி அன்று பழையதை எரிக்கிறோமோ இல்லையோ… நமது பாரம்பரியத்தை மறப்பதை ஹாபியாக வைத்துள்ளோம். சிறு சிறு உடல் உபாதைகள், கோளாறுகளுக்கு எல்லாம் அஞ்சி மருத்துவமனைக்கு ஓடுவது இன்றைய ப்பேஷன் ஆகிவிட்டது. மருத்துவமனையில் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வது இன்று மக்களின் பொழுதுபோக்காக மாறியுள்ளது. நமது பாரம்பரியங்களில் நாம் மறந்த பல விஷயங்களில் ஒன்று பாட்டி வைத்தியம். என்ன உடல் கோளாறு ஏற்பட்டாலும் நமது வீட்டினுள்ளே இருக்கும் உணவு பொருட்கள் மற்றும் வீட்டருகே முளைத்திருக்கும் புல், பூண்டினை வைத்து சரிசெய்துவிடும் மருத்துவச்சி தான் நமது பாட்டி.
இன்று எவ்வளவு எளிதாக இருந்தாலும் தாயும், கருவில் இருக்கும் சேயும் நலனுடன் இருந்தாலும் சிசேரியன் செய்யும் மருத்துவர்கள் மத்தியில், கருவில் உள்ள சேய் தலை கவிழ்ந்து இறந்தால் கூட எவ்வாறு சுகப்பிரசவம் செய்ய வேண்டும் என்ற யுக்தி அறிந்தவள் தான் பாட்டி. இது போல பல வித்தைகள் கற்று வைத்திருக்கும் பாட்டி வைத்தியம் மூலம். நமக்கு இந்நாட்களில் ஏற்படும் சின்ன சின்ன உடல் கோளாறுகளில் எவ்வாறு தீர்வு காண்பது என்று தான் தெரிந்துக்கொள்ளப் போகிறோம்….
இருமல்
இருமல் ஏற்படும் போது சரியாக அரைத்தேக்கரண்டி தேனை உட்கொண்டால் நிவாரணம் பெறலாம். பெரும்பாலான நேரங்களில் இது நல்ல தீர்வளிக்க கூடியது.
குமட்டல்
சிறு துண்டு எலுமிச்சை அல்லது இஞ்சியை வாயில் வைத்து சப்பி சாப்பிட்டால் குமட்டல் நின்றுவிடும். பாட்டி வைத்தியத்தில் குமட்டலுக்கு சிறந்த தீர்வாய் இது கருதப்படுகிறது.
தீக்காயங்கள்
ஒருவேளை தீக்காயங்கள் எற்பட்டால், காயம் ஏற்பட்ட இடத்தில் கற்றாளை இலையின் உள்ளிருக்கும் சாற்றை எடுத்து தடவினால் சீக்கிரம் காயம் குணமடையும்.
பல் வலி
பல் வலி ஏற்படும் போது பல் மற்றும் ஈறு பகுதிகளில் கிராம்பு எண்ணெய்யை தடவி வந்தால் பல் வலி விரைவில் குணமடையும். பல் வலியில் இருந்து குணமடைய இது ஒரு சிறந்த தீர்வாகும்.
பல் வலி ஏற்படும் போது பல் மற்றும் ஈறு பகுதிகளில் கிராம்பு எண்ணெய்யை தடவி வந்தால் பல் வலி விரைவில் குணமடையும். பல் வலியில் இருந்து குணமடைய இது ஒரு சிறந்த தீர்வாகும்.
பல் வலி ஏற்படும் போது பல் மற்றும் ஈறு பகுதிகளில் கிராம்பு எண்ணெய்யை தடவி வந்தால் பல் வலி விரைவில் குணமடையும். பல் வலியில் இருந்து குணமடைய இது ஒரு சிறந்த தீர்வாகும்.
படுக்கைக்கு செல்லும் முன், ஒரு டம்ளர் காய்ச்சிய பாலைப் பருகுவிட்டு சென்றால் நன்கு உறக்கம் வரும். இது நூற்றாண்டு காலமாக நாம் பின் பற்றி வரும் முறையாகும்.உங்களது தூக்கமின்மை கோளாறுக்கு இது கட்டாயம் தீர்வு தரும்.
குடல் பிரச்சனைகள்
டான்டேலியன் (மஞ்சள் மலர் கொண்ட சிறிய செடி வகை), இதை டீயில் கலந்து பருகி வந்தால் குடல் சார்ந்த கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இன்றளவிலும் இது நல்ல தீர்வளிக்க கூடியது ஆகும்.
சிறுநீர் உபாதை
மருத்துவ குறிப்புகள் ஏதும் இல்லை என்ற போதிலும், குருதிநெல்லி சிறுநீர் உபாதைகளுக்கு நல்ல தீர்வளிகிறது என பழங்காலத்தில் இருந்தே நம்பப் படுகிறது.
மாதவிடாய் கோளாறுகள்
வெதுவெதுப்பான நீரில் இரண்டு அல்ல மூன்று வெற்றிலையின் சாரை கலந்து பருக வேண்டும். பின்னர் ஒரு நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை பருக வேண்டும். இவாறு செய்து வந்தால் மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணலாம்.
மாதவிடாய் கால மாற்றம்
மாதவிடாய் ஏற்படும் நாட்களில் மாற்றங்கள் ஏற்படும் பிரச்சனை சரியாக வேண்டும் எனில், எலுமிச்சை ஜூஸில் கொஞ்சம் இலவங்கப் பட்டையை போடி செய்து கலந்து தினம் தோரும் பருகி வந்தால், நல்ல தீர்வளிக்கும். இது ஒரு சிறந்த பாடி வைத்தியமாக கருதப்படுகிறது.
அஜீரண கோளாறு
ஆரஞ்சு ஜூஸில் கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுப் பொடியை கலந்து தினமும் பருகி வந்தால், நாளடைவில் அஜீரண கோளாறு சரியாகிவிடும்.