28.5 C
Chennai
Monday, Nov 18, 2024
apple soup. L styvpf
ஆரோக்கிய உணவு

புரதச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிள் சூப்

தேவையான பொருட்கள் :

ஆப்பிள் – 2,

எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
நாட்டு சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
பால் – ஒரு டம்ளர்.

செய்முறை:

ஆப்பிளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருக்கியதும், பொடியாக நறுக்கிய ஆப்பிள் சேர்த்து லேசாக வதக்கி, 5 டம்ளர் நீர் சேர்த்து வேகவிடவும்.

ஆப்பிள் நன்றாக வெந்ததும் நாட்டு சர்க்கரை, மிளகுத்தூள், பால் சேர்த்துக் கலக்கவும்.

பரிமாறும் முன் விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

சத்தான சுவையான ஆப்பிள் சூப் ரெடி.

பலன்கள்: ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இதில், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எந்த நோயும் உடலைத் தாக்காமல் காப்பதுடன், உடலை வலுவாக்கும். சருமம் பொலிவாகும். உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

Related posts

மீன் சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…புரோட்டீன் பவுடரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

தெரி ஞ்சா ஷா க் ஆயிடுவீங்க! இந்த பழத்தின் விதையை சாப்பிட்டு விடாதீர்கள்…

nathan

உடலுக்கு மட்டுமல்ல, நம்முடைய சருமத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது செவ்வாழைப்பழம் !!

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலில் கொழுப்புகளை கரைக்கும் பாசிப்பயறு!…

nathan

வாய்ப்புண், வயிற்றுபுண்ணை குணமாகும் கசகசா கஞ்சி

nathan

கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா பலாப்பழ விதைகளை எடுத்து கொள்வதால் உடலில் ஏற்படும் ஆச்சரிய நன்மைகள்..!!

nathan