28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
sleep
ஆரோக்கியம் குறிப்புகள்

நல்ல தூக்கத்தைப் பெற சில டிப்ஸ்…

சிலருக்கு இரவில் தூக்கமே வராமல் அவஸ்தைப்படுவார்கள். இப்படி தினமும் சரியான அளவு தூக்கத்தைப் பெறாமல் போனால், உடலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். குறிப்பாக சரியான தூக்கம் இல்லையெனில் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் போகும். எப்போதும் சோர்ந்தவாறே காணப்பட நேரிடும். இரவு நேரத்தில் சரியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாமல் போவதற்கு ஒருசில பழக்கவழக்கங்களும், உண்ணும் உணவுகளும் கூட காரணமாக இருக்கும்.

எனவே தூக்கத்தைப் பெற பலரும் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அப்படி எடுத்து வந்தால், அது ஒரு கட்டத்தில் உயிருக்கே உலை வைத்துவிடும். ஆகவே நீங்கள் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற பின்பற்ற வேண்டியவைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை மனதில் கொண்டு நடந்தால், நிச்சயம் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

ஒரே நேரத்தில் தூங்கவும்

தினமும் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தைக் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்கினால், பின் நிம்மதியான தூக்கத்தைப் பெறவே முடியாது. ஆகவே ஒரே நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

சரியான சுற்றுச்சூழல்

இரவில் தூங்கும் போது, தூங்கும் அறையானது இருட்டாக, சற்று குளிர்ச்சியான, அமைதியாக இருக்க வேண்டும். மேலும் படுக்கும் மெத்தை, போர்வை போன்றவை மென்மையாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால், நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

காபியைத் தவிர்க்கவும்

மதியம் 2 மணிக்கு மேல் காபியை அதிகம் குடிக்க வேண்டாம். ஏனெனில் அது இரவில் தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும்.

இரவில் உடற்பயிற்சி வேண்டாம்

இரவில் படுக்கும் முன் சிலர் நன்கு தூக்கம் வரும் என்று உடற்பயிற்சியை செய்வார்கள். ஆனால் அப்படி செய்தால், உண்மையில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. ஆகவே தூங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை தவிர்த்திடுங்கள்.

ஆல்கஹால்

பெரும்பாலானோர் ஆல்கஹால் குடித்தால் இரவில் நன்கு தூங்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் ஆல்கஹால் குடித்தமால், இது நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்காது. மாறாக அவ்வப்போது தூக்கத்திற்கு இடையூறை தான் ஏற்படுத்தும்.

மொபைல், கம்ப்யூட்டர்

படுக்கும் போது அருகில் செல்போன், கம்ப்யூட்டர் போன்றவை இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். சொல்லப்போனால் அவை இருக்கும் அறையில் படுப்பதை தவிர்த்திடுங்கள். இதனால் அதிலிருந்து வெளிவரும் அலை தூக்கத்தைக் கெடுக்கும்.

Related posts

நோயெதிர்ப்பு சக்தியைப் பற்றி கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள்!!தெரிஞ்சிக்கங்க…

nathan

சலிப்பான உங்க திருமண வாழ்க்கைய சுவாரஸ்யமாக்க

nathan

என்னதான் பல் தேய்த்தாலும் பற்களில் மஞ்சள் கறையா? கவலையே வேண்டாம்…

sangika

தெரிஞ்சிக்கங்க…இரவு உணவின் போது குழந்தைகளிடன் கேட்க வேண்டிய கேள்விகள்!

nathan

விட்டமின் பி காம்ப்ளக்ஸ் டேப்லெட்டின் பயன்பாடுகள் – Vitamin B Complex Tablet Uses in Tamil

nathan

கர்ப்பத்தை தடுக்கும் நீர்க்கோவைக்கு தீர்வு..

nathan

சமையல் குறிப்பு டிப்ஸ்

nathan

டயட் மேனியாடயட்கள் எடைக்குறைப்பை மையமாகக் கொண்டே உள்ளன

nathan

சூப்பர் டிப்ஸ்.. தினமும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்…!

nathan