27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
3 beetroot
ஆரோக்கிய உணவு

கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

உடலின் முக்கியமான உறுப்புக்களில் ஒன்று தான் கல்லீரல். இது உடலில் பல்வேறு முக்கியமான செயல்பாடுகளை செய்கிறது. அதில் செரிமானத்தில் உதவி புரிவது, மெட்டபாலிசம், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டசசத்துக்களை சேகரித்து வைப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் கல்லீரல் உடலின் மற்ற பாகங்களுக்கு வேண்டிய கெமிக்கல்களை உற்பத்தி செய்கிறது. அதுமட்டுமின்றி உடலின் டாக்ஸின்களை வெளியேற்றுவதிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. இதுப்போன்று பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவது தான் கல்லீரல்.

இந்த கல்லீரலின் ஆரோக்கியமானது, ஆரோக்கியமற்ற டயட் மற்றும் மோசமான வாழ்க்கை முறையினால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்ற முடியாமல் இருக்கும். இப்படி கல்லீரல் சீராக இயங்காமல், உடலில் உள்ள டாக்ஸின்கள் சரியாக வெளியேற்றப்படாமல் இருந்தால், உடல் பருமன், இதய நோய், நாள்பட்ட சோர்வு, தலை வலி, செரிமான பிரச்சனை, அலர்ஜி போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஆகவே கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய சில ஆரோக்கிய உணவுகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.

பூண்டு

பூண்டு கல்லீரலில் உள்ள நொதிகளை சீராக செயல்பட வைத்து டாக்ஸின்களை வெளியேற்றும். மேலும் இதில் உள்ள அல்லிசின் மற்றும் செலினியம், கல்லீரலை சுத்தப்படுத்துவதோடு, கல்லீரலுக்கு டாக்ஸின்களால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது. அதற்கு 2-3 பூண்டை தினமும் பச்சையாக சாப்பிட்டும் வரலாம் அல்லது அன்றாட உணவில் சேர்த்தும் வரலாம்.

பப்பளிமாஸ்

பப்பளிமாஸ் பழத்தின் வைட்டமின் சி, பெக்டின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இவை கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ளும். ஆகவே இந்த பழம் கிடைத்தால், அதனை ஜூஸ் போட்டு குடித்து வாருங்கள். குறிப்பாக நீங்கள் ஏதேனும் மருந்துகளை எடுத்து வருபவராயின், மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் கிளின்சிங் தன்மை அதிகம் இருப்பதோடு, அது கல்லீரலின் செயல்பாட்டிற்கும் உறுதுணையாக இருக்கும். இதில் ப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டாக கரோட்டீன் இருப்பதால், இது கல்லீரலின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளும். மேலும் இது ஒரு இயற்கையான இரத்த சுத்திகரிக்கக்கூடிய உணவுப் பொருளும் கூட. ஆகவே பீட்ரூட்டை அப்படியே அல்லது அதனை சாறு எடுத்து குடித்து வந்தால், உடலும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சையின் நன்மைகளைப் பற்றி சொன்னால் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அவை கல்லீரலில் உள்ள நொதிகளை அதிகம் உற்பத்தி செய்து, சீரான செரிமானத்திற்கு வழிவகுக்கும். கல்லீரல் கனிமச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு எலுமிச்சை உதவியாக இருக்கும். ஆகவே முடிந்தால், அன்றாடம் எலுமிச்சை ஜுஸை தவறாமல் குடித்து வாருங்கள். அதிலும் தேன் சேர்த்து கலந்து குடித்து வருவது மிகவும் நல்லது.

க்ரீன் டீ

க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால், அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் மற்றும் கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றி, உடலின் நீர்ச்சத்துக்களின் அளவை அதிகரிக்கும். அதிலும் க்ரீன் டீயை ஒரு நாளைக்கு 2 கப் குடிக்கலாம். முக்கியமாக தேன் சேர்த்து குடிப்பது நன்மை பயக்கும். குறிப்பாக அளவுக்கு அதிகமாக குடித்தால், அதுவே கல்லீரலின் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்.

அவகேடோ

அவகேடோவில் உள்ள குறிப்பிட்ட கெமிக்கல்கள் கல்லீரல் பாதிப்பை குறைப்பதாக 2000 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏனெனில் இந்த பழத்தில் உள்ள க்ளூடாதியோனைன், கல்லீரலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

மஞ்சள்

அன்றாட உணவில் சிறிது மஞ்சளை சேர்த்து வந்தால், அது கொழுப்புக்களை கரைப்பதுடன், கல்லீரலில் தங்கியுள்ள டாக்ஸின்களையும் வெளியேற்றும். முக்கியமாக மஞ்சள் பாதிப்படைந்த கல்லீரல் செல்களை புதுப்பிக்கும் திறன் கொண்டது. ஆகவே கல்லீரல் ஆரோக்கியமாகவும், சீராகவும் செயல்பட மஞ்சளை உணவில் அன்றாடம் சேர்த்து வாருங்கள். அதிலும் 2 வாரத்திற்கு தொடர்ந்து தினமும் மஞ்சள் கலந்த பாலை இரண்டு முறை குடித்து வருவது மிகவும் நல்லது.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் ஆப்பிளில் உள்ள பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதுடன், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கும். ஆகவே அன்றாடம் முடிந்தால் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வாருங்கள்.

வால்நட்ஸ்

மூளை போன்ற தோற்றத்தைக் கொண்ட வால்நட்ஸில், கல்லீரலை சுத்தப்படுத்தும் க்ளூட்டாதியோனைன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள பாலிஃபீனால்கள் கல்லீரல் பாதிப்படைவதைத் தடுக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரங்களில் வால்நட்ஸை உட்கொண்டு வந்தால், கல்லீரல் பாதிப்பைத் தடுக்கலாம்.

ப்ராக்கோலி
ப்ராக்கோலி
ப்ராக்கோலியிலும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே உங்களுக்க இந்த காய்கறி எங்கேனும் கிடைத்தால், அதை உட்கொள்வதை தவிர்க்காதீர்கள். அதிலும் இந்த காய்கறியை வாரத்திற்கு மூன்று முறை உட்கொண்டு வந்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

Related posts

அடேங்கப்பா!ஒரு கோப்பை மாதுளம்பழப் பானத்தில் இத்தனை நன்மையா..?

nathan

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

sangika

இரவு தூங்கும் முன் சிறிது செலரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ் ! அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை…!!

nathan

அளவுக்கு மேல் எடுத்து கொள்ளாதீங்க! உயிருக்கே உலை வைக்கும் பாதாம்..

nathan

தெரிஞ்சிக்கங்க…30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…பீன்ஸ் சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா…?

nathan

தெரிஞ்சிக்கங்க… ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் அவரைக்காய்

nathan

வெப்பம் தவிர்த்து குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரை

nathan