31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…இதய நோயிலிருந்து வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா?

குடம் புளியில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் எனும் ஆசிட் இதயம் சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மை படைத்தது என்பதுடன் உடலில் கொழுப்பை குறைத்து மெல்லிய தோற்றத்தையும் ஏற்படுத்தும்.

உடல் மெலிவிற்கான தயாரிக்கப்படும் பல மருந்துகளில் பிரதான மருந்தே குடம் புளி தான். எனவே உடலை இயற்கையான முறையில் மெலிய செய்ய விரும்புபவர்கள் அன்றாட சமையலில் குடம் புளியை பயன்படுத்தி கொள்ளலாம்.

குடம்புளியிலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்து வயிற்றுபோக்கை குணப்படுத்த தரப்படுகிறது.

குடம்புளியின் பழத்தோலையில் இருந்து சாறு எடுத்து வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாக தரலாம். இந்த குடம் புளி மரத்தின் பட்டையில் வடியும் மஞ்சள் நிற பிசின் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

கொடம் புளி சுவை மிகுந்தது. ஆனால், சமையலில் அளவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும்.

குடம் புளியைச் சீராகச் சமையலில் சேர்த்துவந்தால், அழற்சிப் பிரச்னைகள் நீங்கும், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

குடம்புளியை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, மூன்று மணி நேரம் ஊறவைத்த பின்னர், விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன், வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள், கறுப்பு உப்பு சேர்த்து, சர்பத் போல அருந்தலாம்.

Related posts

மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை நோய்கள்

nathan

இளம் வயதில் ஆண்மை குறைவு ஏன் ஏற்படுகின்றது?

nathan

இன்சுலின் செடி – சர்க்கரை நோயாளிகளின் வரமா?

nathan

தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி கையாள்வது?

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி – இயற்கை மருத்துவம்!

nathan

பொது வை-பை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

nathan

மாதவிலக்கு கோளாறை சரிசெய்யும் பண்ணைகீரை

nathan

சர்க்கரை நோயாளிகள் ஏன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்?

nathan

கருக்குழாய் அடைப்பும் நவீன சிகிச்சைகளும்

nathan