28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
baby size 08
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரியுமா?

ஒரு பெண் கர்ப்பமாகிவிட்டால், குழந்தையை கையில் எடுத்தும் கொஞ்சும் வரை அக்குழந்தையின் நினைவிலேயே இருப்பாள். கர்ப்ப காலத்தில் குழந்தை ஒவ்வொரு வாரமும் வளர்ச்சி பெறும். சொல்லப்போனால் குழந்தையின் வளர்ச்சி ஒரு அபூர்வமான ஒன்று என்றும் கூறலாம்.

How Big Is Your Baby? The Size Of Your Baby During Various Stages Of Pregnancy
ஆம், ஒரு செல் மற்றொரு செல்லுடன் இணைந்து, பின் அந்த செல்கள் பெருகி, சில மாதங்கள் கழித்து, குழந்தையாக பிறக்கிறது என்றால் சாதாரணமான நிகழ்வா என்ன? உங்களுக்கு கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1-2 வாரம்

ஆரம்ப காலத்தில், கருமுட்டையானது விந்தணுவுடன் இணைந்து, சிறிய கடுகு அளவில் இருக்கும். இந்நிலையில் கருவில் சுமார் 32 செல்கள் இருக்கும்.

5 வாரம்

இந்த வாரத்தில், அந்த கரு சற்று வளர்ந்து மிளகு அளவு இருக்கும். இந்த காலத்தில் தான் இரத்த நாளங்கள், இதயம், தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சி பெற ஆரம்பமாகும். இந்த வாரத்தில் கரு சுமார் 0.05 இன்ச் இருக்கும்.

7 வாரம்

7 வாரத்தில் கரு 1/2 இன்ச், அதாவது ஒரு ப்ளூபெர்ரி அளவில் இருக்கும்.

9 வாரம்
9 வாரம்
9 வாரத்தில் உங்கள் குழந்தை செர்ரிப் பழ அளவில் இருக்கும். 9 வாரத்தில் தான், கரு ஒரு உருப்பெற்ற கருவாகி இருக்கும்.

15 வாரம்

இந்த காலத்தில், குழந்தை ஒரு ஆப்பிள் அளவில், அதாவது 4 இன்ச் இருக்கும். இந்த வாரத்தில் குழந்தை மெதுவாக நகர ஆரம்பிக்கும்.

18 வாரம்

இந்த வாரத்தில் குழந்தை 6 இன்ச் இருக்கும். 19 ஆவது வாரத்தில், குழந்தையின் கால்கள் வளர ஆரம்பிக்கும்.

22 வாரம்

22 வாரத்தில் குழந்தை சுமார் 10 இன்ச் அளவில் இருக்கும். இந்த காலத்தில் குழந்தையின் நுரையீரல் வளர ஆரம்பமாகும்.

30 வாரம்

இந்த வாரத்தில் கருப்பையில் இருக்கும் குழந்தை தூங்குவதையும், விழித்துக் கொண்டிருப்பதையும் உணர முடியும். 30 வார காலத்தில் குழந்தை சுமார் 15 இன்ச் அளவில் இருக்கும்.

40-42 வாரம்

இது கர்ப்ப காலம் முடிவடையும் காலமாகும். இந்த காலத்தில் குழந்தை 20 இன்ச் அளவில் இருக்கும்.

Related posts

குண்டான பெண்கள் கருத்தரித்தால் பின்பற்ற வேண்டியவைகள்

nathan

வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்

nathan

அவசியம் படிக்கவும்! திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

nathan

காயங்களை போக்கும் கற்றாழை!

nathan

அல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு

nathan

உங்களுக்கு தெரியுமா இளமையை காக்கும் துளசி…இன்னும் பல நோய்களை தீர்க்கும்!

nathan

சளி, இருமல் விரட்ட உதவும் எளிய வீட்டு வைத்தியம்!

nathan

உங்களுக்கு அடிக்கடி இங்க வலிக்குதா? கண்டிப்பாக வாசியுங்க….

nathan

உடல் வலியை போக்கும் இந்த பூவை பற்றி உங்களுக்கு தெரியுமா ? அப்ப உடனே இத படிங்க…

nathan