வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண்ணுக்கு திராட்சை அருமையான மருந்தாகும்.
தினமும் காலையில் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வந்தால், வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும்.
மேலும், தலைசுற்றல், மலச்சிக்கல், கை – கால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை வெறுமனே பழமாகவோ, ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விட்டமின்கள், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து ஆகியவை அதிக அளவு உள்ள இந்த பழத்தில் சருமத்தை நல்ல நலத்துடன் வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு.
பொதுவாக பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் மலச்சிக்கலை சரிசெய்ய திராட்சை நல்ல மருந்தாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் மறுநாள் காலை அதன் பலன் தெரியும்.
இதே பிரச்சனை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு காலையில் கண்விழித்ததும் அதை நசுக்கி அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தாலே பிரச்சனை சரியாகிவிடும்.
கர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அந்தமாதிரி நேரங்களில் திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
கண்களில் கருவளையங்களை கொன்டவர்கள் பலர் உண்டு. அது மிகவும் அசிங்கமாக இருக்கும். திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவினால் போதும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.
வெளிரென்ற முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது.
இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள Platelets- களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும் சுத்தமாகவும் மாற்றுகின்றது.