பண்டைய ஆயுர்வேத நடைமுறையின்படி தேன் மற்றும் இலவங்கம் இரண்டும் பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது.
இந்தக் கலவை வயிற்று வலி, சளி, இருமல் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சிறுநீர்ப்பை நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும் தேன் மற்றும் இலவங்கப் பட்டை கலவை உதவும்.
இது நம் உடலுக்கு எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. தேன் மற்றும் இலவங்கப் பட்டை கலந்து செய்யப்படும் சிகிச்சைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேன் மற்றும் இலவங்கப் பட்டை பேஸ்ட் உங்கள் சங்கடத்தை ஏற்படுத்தும் முகப் பருவை குணப்படுத்த உதவும். 1 தேக்கரண்டி இலவங்கப் பட்டையின் தூள் மற்றும் 3 தேக்கரண்டி தேனை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்களின் முகப் பருக்கள் மீது தடவி விடுங்கள். இரவு முழுவதும் அதனை அப்படியே விட்டு விடுங்கள். இந்தக் கலவை மற்ற தோல் தொடர்பான பிரச்சனைகளுக்குக் கூட சிகிச்சையளிக்கும்.
தோலழற்சி, ரிங்வோர்ம் அல்லது தோல் தொடர்பான பிற தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் தேன் மற்றும் இலவங்கப் பட்டை பேஸ்ட் மூலம் இதனை சரி செய்யலாம்.
தேன் மற்றும் இலவங்கப் பட்டையைக் கலந்து உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். இவை இரண்டு பொருட்களும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
மேலும், இந்தக் கலவை செரிமான அமைப்பை மேம்படுத்தவும், வயிறு தொடர்பான பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவி புரிகின்றன.
உங்களின் குடல் ஆரோக்கியத்திற்கும் தேன், இலவங்கப் பட்டை கலவை பயனளிக்கும்.
தேன் மற்றும் இலவங்கப்பட்டை பேஸ்ட் கீல்வாதம் வலிக்கு பயனுள்ளதாக இருக்கும். வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இலவங்கப் பட்டை தூளைக் கலந்து பேஸ்ட் போல் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இந்தக் கலவையை வலி நிறைந்த பகுதியில் தடவவும். இல்லையெனில், சூடான நீரில் 2 :1 என்ற விகிதத்தில் தேன் மற்றும் இலவங்கப் பட்டை தூளைக் கலந்து குடிக்கலாம்.
தேன் மற்றும் இலவங்கப் பட்டை கலவையின் மற்றொரு ஆச்சரியமான நன்மை என்னவெனில், இது உங்களின் உடல் எடை இழப்புக்கு உதவி புரியும்.
வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடியை கலந்து உட்கொள்ளுங்கள். இந்தக் கலவை உங்கள் உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. இது உங்கள் உடலின் எடை கூடுவதை தவிர்க்கிறது.