தற்போது இருக்கும் நவீன உலகில் சூப்பு என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்.
ஏனெனில் உடலை குறைப்பதற்கு, உடலை கூட்டுவதற்கு, உடலில் தேவையான சத்துக்களை பெறுவதற்கும் சூப்புகள் உதவுகின்றன. சூப்புகளிலே காய் வகை சூப்புகள், பழ வகைகள் மற்றும் அசைவம் என பல்வேறு வகைகளில் சூப்புகள் கிடைக்கிறது.
அப்படிப்பட்ட இந்த சூப்புகளில் நமக்கு மிகவும் நன்மை தரும் சூப்புகளைப் பற்றி இங்கு பார்ப்போம். குறிப்பாக சூப்புகள் தயாரிக்கும் போது, அதிகம் நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை பயன்படுத்தினால் உடலுக்கு மிகவும் நல்லது.
தக்காளி சூப்
தக்காளி சூப்பில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன, இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தக்காளி சூப்பை எடுத்துக் கொள்ளலாம்.
வெஜிடேபில் சூப்
கீரை ப்ரோக்கோலி, கேரட், பட்டாணி, குடை மிளகாய், பீன்ஸ் போன்ற பல்வேறு காய்கறிகளை கொண்டு தயார் செய்யப்படும் வெஜிடபுள் சூப்பில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது, உங்கள் உடல் எடையை வெகுவாக குறைக்க உதவும்.
சிக்கன் சூப்
இப்போது இருக்கும் பலரின் விருப்பமாக சிக்கன் சூப் உள்ளது. இதில் புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்தளவு கலோரி மற்றும் கொழுப்புகள் இருப்பதன் காரணமாக, இதுவும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும், சிக்கன் சூப் அடிக்கடி குடித்து வந்தால், நோயெதிப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இது அழற்சியையும் குறைக்கிறது.
காளான் சூப்
காளான் சூப்பில் புரோட்டீன், நார்ச்சத்துகள் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களுடன் குறைந்தளவு கலோரிகள் இருப்பதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை தருகிறது. இது உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது.