35 C
Chennai
Wednesday, Jul 2, 2025
கிராமத்துக் கோழிக் குழம்பு (village chicken kuzhambu)
அசைவ வகைகள்

கிராமத்துக் கோழிக் குழம்பு (village chicken kuzhambu)

தேவையானவை:

கோழிக்கறி-1 /2 கிலோ
பச்சை மிளகாய்-4
தக்காளி-4
சிவப்பு மிளகாய்-10
மல்லி- 25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி-கொஞ்சம்
மிளகு -1 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
சோம்பு-1 /2 தேக்கரண்டி
கசகசா-1 தேக்கரண்டி
இஞ்சி- 1 இன்ச் நீளம்
பூண்டு-10 பல்
தேங்காய்-1 /2 மூடி
ஏலம்-1
பட்டை- சிறு துண்டு
கிராம்பு- 3
எண்ணெய்-3 தேக்கரண்டி
கறிவேப்பிலை-1 கொத்து
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

1.கோழிக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

2.தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம்.

3.பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 4 ஆக நறுக்கவும்.

4.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும்,ஏலக்காயை உரித்து போட்டு, அத்துடன் பட்டை, கிராம்பையும் போடவும். சிவந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும். 5.வெங்காயம் நன்கு சிவந்ததும், தக்காளி போட்டு,அதில் தட்டிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, கோழிக்கறி, மஞ்சள் பொடி , உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

6.கறி நன்கு வதங்கி நீர் விட்டு வரும். இதனை 5 -10 நிமிடம் வதங்கியதும் கறி நன்கு வெந்துவிடும், அதில் அரைத்த மிளகாய் ,தேங்காயை போட்டு வதக்கி, கறி முழுகும் அளவு நீர் ஊற்றவும்.

7.குழம்பு கொதித்து கெட்டியாக வரும்போது இறக்கி வைத்து கொத்தமல்லி தழை போடவும்.

கிராமத்துக் கோழிக் குழம்பு மிளகாய் பொடியில் செய்யாததால், தனியான, மணம், சுவையுடன் இருக்கும். இதனை இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி, பூரி மற்றும் பராத்தாவுக்கு துணையாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
chk

Related posts

முட்டை தோசை

nathan

சுவையான சிக்கன் பிரைட் ரைஸ்

nathan

மீன் வறுவல்

nathan

மட்டன் கறி (Chettinad Mutton Curry)

nathan

நெத்திலி மீன் கிரேவி

nathan

சைனீஸ் மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி

nathan

சிக்கன் பிரியாணி

nathan

காரமான மசாலா மீன் வறுவல்

nathan

சில்லி சிக்கன் கிரேவி

nathan