26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
132
ஆரோக்கியம் குறிப்புகள்

எலுமிச்சை 7 பலன்கள்

வெளியூர் பயணத்தின்போது சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க, எலுமிச்சைச் சாற்றைக் கையோடு எடுத்துச் செல்லலாம். எலுமிச்சைச் சாறு, சிறுநீரை அதிகரித்து, தொற்றுக்கள், நச்சுக்களை வெளியேற்றுகிறது.

பொதுவாக, புளிப்புத் தன்மைகொண்ட பழங்கள், ரத்தக் குழாயைச் சுத்தப்படுத்தும். எலுமிச்சை, ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ஆன்டிபாக்டீரியலாகவும் இருப்பதால், சரும நோய்களை அண்டவிடாது.

காலையில் வெந்நீரில் 5 – 10 மி.லி எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
வாய் துர்நாற்றம், பல்லில் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால், எலுமிச்சைச் சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்கச் சரியாகும்.

கபம் அதிகம் இருந்தால், காலையில் எழுந்ததும் சளியுடன் கூடிய எச்சில், வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும். இவர்கள், 10 மி.லி எலுமிச்சைச் சாற்றுடன் ஐந்து மி.லி இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம். சட்டென நிவாரணம் கிடைக்கும்.

சிலருக்கு, வயிற்றில் காற்று அடைத்ததுபோல், அழுத்தமாக இருக்கும். இதற்குச் சுடுநீரில் எலுமிச்சைச் சாறு, வறுத்துப் பொடித்த சீரகம் அரை டீஸ்பூன், சிறிது தேன் கலந்து அருந்தலாம். சட்டென காற்று வெளியேறி, வயிறு லேசாகும். மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது.

மூல நோய் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கறுப்பு உப்பு கலந்து, வாயில் அடக்கிக்கொள்ளலாம். வலி, வீரியம் குறையும்.
13

Related posts

தெரிஞ்சிக்கங்க…குழந்தைக்கு முழு ஆரோக்கியமும் கிடைக்க, கர்ப்ப காலத்தில் நீங்க இதை சாப்பிட்டே ஆகனும்!

nathan

தெரிஞ்சிக்கங்க… வீட்டின் மூளையில் வெங்காயத்தை நறுக்கி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

டான்சில்ஸ் பாதிப்பு குழந்தைகளுக்கு வரும்..

nathan

7 நாட்களில் உடல் சக்தியை அதிகரிப்பது எப்படி?

nathan

உடல் சூட்டை 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய வழிமுறை

nathan

வியாழக்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க…

nathan

பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலைகள்

nathan

தினசரி இந்த 10 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்! #DailyMotivation

nathan

இலவங்கப்பட்டை பற்சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு

nathan