ஸ்டாபிலொ காக்கஸ் அல்லது ஸ்ட்ரெப்டோ காக்கஸ் என்ற நுண்கிருமியினால் தொற்று; துாசி, புகை ஆகியவற்றால் தொற்று; வைரஸ் தொற்று ஆகிய மூன்று வகை பாதிப்பால், ‘விழி வெண்படல அழற்சி’ அதாவது, ‘மெட்ராஸ் ஐ’ ஏற்படுகிறது.
# முதலில் கண்ணின் வெள்ளை பகுதியில் தோன்றி, கண் முழுவதும் சிவந்து, நீர்க் கோர்த்து, இமைகளை பிரிக்க முடியாமல் போகும்.
# ஒரு வாரம் முதல், பத்து நாட்கள் வரை கண்ணில் ஆரம்பித்து, மறு கண்ணில் பரவி தொந்தரவு கொடுக்கும்.
# கண்களில் அதிக நீர் சுரப்பு, சிவந்து போதல், அரிப்பு, வீக்கம், வலி, இமைகளில் பிசுபிசுப்பு,
கண் கூசுதல் ஆகியவை அறிகுறிகள். வருமுன் காப்போம் என்பதற்கெல்லாம், இந்த கண்வலி சரிப்பட்டு வராது. வந்த பின் கடுமையை குறைக்க, பல வழிகள் உள்ளன.
# தயிரை கண்கள் மீது பூசி, குளிர்ந்த நீரில், சுத்தமான துணியைத் தோய்த்து, துணியால் கண்ணைத் துடைக்கவும்.
# வெந்நீரில் உப்பை போட்டு, அந்த நீரை பஞ்சில் தோய்த்து, கண்களின் மேல் வைத்தால், கிருமிகள் அழிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
# எலுமிச்சை சாறு எடுத்து, கண்களை துடைக்கும் போது, எரியும்; ஆனால், கழிவுகள் வெளியேற உதவும்.
# கற்றாழை ஜெல்லை, கண்களை கழுவ பயன்படுத்தலாம்.
# இரண்டு ஸ்பூன் மஞ்சள் துாளை வெந்நீரில் கலந்து, ஒரு மெல்லிய துணியை அதில் நனைத்து, கண்கள் மீது வைத்துக் கொள்ளலாம்.
# பாக்டீரியா தொற்றுகளுடன் போராட வல்ல, ‘ஆப்பிள் சீடர் வினிகரை’ தண்ணீர் கலந்து, அதனால் கண்களை கழுவி, பின் ஒத்தடம் கொடுப்பது நல்லது.
# உருளைக்கிழங்கை துருவி, பற்றுப் போடுவது போல் மூன்று நாட்கள் தொடர்ந்து இரவில் போடுவது நல்லது.
# சீரக தண்ணீரை கொதிக்க வைத்து தினமும் இருமுறை கழுவ, வலியையும், சிவப்பு தன்மையையும் மற்றும் எரிச்சலையும் நீக்கும்.
# இதமான சூட்டில் ரோஸ் ஆயில், தாழம்பு ஆயில் மற்றும் சீமை சாமந்தி ஆயில் வைத்து, நாள் ஒன்றுக்கு, நான்கு முறை ஒத்தடம் கொடுத்தால் பாதிப்பை குறைப்பதுடன், தொற்றையும் தடுக்கும்.
# இது எதுவுமே செய்ய வசதி இல்லையென்றால், ஐஸ் கட்டிகளை துணியால் சுற்றி ஒத்தடம் கொடுக்க, வீக்கம், அரிப்பு, கண் சிவப்பு குறையும்.