25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
pic
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க… இளநீர் குடிச்சிட்டு வழுக்கையை தூக்கி குப்பையில போடுவீங்களா?

வெயில் காலம் வந்து விட்டால் போதும் அனைவரும் விரும்பி இளநீர் குடிப்போம். இளநீர் குடித்த பிறகு அதிலிருக்கும் வழுக்கை தேங்காயை நீங்கள் சாப்பிட்டது உண்டா.

உண்மையில் இந்த வெள்ளை நிற சதைப்பற்றான தேங்காயில் அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது.

சதைப்பற்றான தேங்காயில் ஏராளமான நார்ச்சத்துக்கள் தாதுக்கள் மற்றும் தனிமங்கள் போன்றவை காணப்படுகிறது.

இந்த வழுக்கை தேங்காயை சாப்பிட மிக சுவையானதாக இருப்பதோடு உங்களுக்கு ஏராளமான நன்மைகளை தரவும் உதவுகிறது.

​வழுக்கை தேங்காயின் நன்மைகள்

இந்த தேங்காய் சதைப்பகுதியை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் உங்க உடல் எடையை குறைக்க முடியும்.
இதிலுள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து தேவையில்லாமல் சாப்பிடுவதை தடுக்கிறது. இதிலுள்ள புரோட்டீன் உங்க உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தாய்ப்பாலுக்கு இணையான சத்துக்கள் தேங்காய் பாலில் காணப்படுகிறது.
தேங்காயில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது உங்க செரிமான ஆரோக்கியத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. தேங்காயில் மீடிய செயின் வடிவ ட்ரைகிளிசரைடு கொழுப்புகள் காணப்படுகிறது.
இந்த கொழுப்புகள் நம்முடைய சிறு குடலால் உறிஞ்சப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. தேங்காயில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. இது உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதன் மூலம் நோய்களை எதிர்த்து உங்களால் போராட முடியும். எனவே இவ்வளவு நன்மைகள் தரும் இளநீர் தேங்காயை தூக்கி எறியாதீர்கள்.
இளநீரை குடித்த பிறகு வழுக்கை தேங்காயை எடுத்து அதில் பழுப்பு சர்க்கரை சேர்த்து கூட சாப்பிடலாம். நன்மைகளை பெறலாம்.

Related posts

கொளுத்தும் வெயில் உடல் சூட்டை தணிக்கனுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

nathan

இதயம்… செரிமானம்… ரத்த சுத்திகரிப்பு… பெரும் பயன்கள் தரும் பெருஞ்சீரக டீ

nathan

இரத்தம் அதிகரிக்க வேண்டுமா? பீட்ரூட் சாப்பிடுங்கள்

nathan

அல்சரை ஏற்படுத்தும் பித்த நீரின் சுரப்பை குறைக்க சில டிப்ஸ்…

nathan

சுவையான ரவா ஓட்ஸ் அடை

nathan

அடேங்கப்பா! எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா ??

nathan

​கர்ப்பகாலத்தில் முட்டைகோஸ் பாதுகாப்பானதா?

nathan

தோலுக்கு மினுமினுப்பை தரும் சைவ உணவுகள்

nathan