அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

இதை உபயோகித்த சிறிது நாட்களிலேயே உங்கள் சரும மாற்றத்தை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்!…

உலகில் பிறந்த மனிதர் அனைவரும் தாங்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்றே நினைப்பர். இது மனித இயல்பு. ஆண்டவனின் படைப்பில் நாம் அனைவரும் போல் இருப்பதில்லை. நாம் அழகாக இருக்கிறோமா, வெண்மையாக இருக்கிறோமோ என்பதை விட நாம் ஆரோக்யமாக இருக்கிறோமா என்பதே முக்கியம்.

நம் உடலின் ஆரோக்யத்தை மற்றவர்களுக்கு காட்டும் கண்ணாடி நம்முடைய புறத்தோல் ஆகும். இது ஆரோக்யமாக இருப்பது மிகவும் முக்கியம். இந்த தோல் பராமரிப்பு நம் உடலை நோயிலிருந்து காப்பாற்றுகிறது.

nalangu mavu

சருமத்தை பாதுகாப்பதின் மூலம் நோய் தொற்றில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நல்ல சீரான சருமம் நம்முடைய தன்னம்பிக்கையை மேம்படுத்தும். இது போன்ற பட்டான அழகிய சருமத்தை பெறுவது மிகவும் கடினமான காரியம் அல்ல.

நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டே நாம் நம்முடைய சருமப் பாதுகாப்பிற்கான பொருளை தயார் செய்துக் கொள்ளலாம்.

இந்த குளியல் பொடி பிறந்த குழந்தைகள் முதல் எல்லா வயதினருக்கும் ஒத்துக் கொள்ளும். இதை உபயோகித்த சிறிது நாட்களிலேயே உங்கள் சரும மாற்றத்தை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

இது பலக் குடும்பங்களில் தொன்று தொட்டு பயன்படுத்தி வரும் குளியல் பொடி ரகசியத்தை இங்கு பகிர்கிறேன்.

குளியல் பொடி அல்லது நலங்குப் பொடி அல்லது ஸ்நான பொடி

ஆவாரம்பூ 250 கிராம்

அருகம்புல் 2 கட்டு

கஸ்தூரி மஞ்சள் – 250 கிராம் (ஆண்கள் இதை தவிர்க்கலாம்)

பூலாங்கிழங்கு – 250 கிராம்

திருநீற்றுப் பச்சிலை – 250 கிராம்

பன்னீர் ரோஜா – 1௦௦

துளசி – 1 கிலோ

வேப்பிலை – 1 கிலோ

பாசிபருப்பு – 1 கிலோ

நெல்லி முள்ளி – 100 கிராம்

வெட்டி வேர் – 500 கிராம்

பூங்காங் கோட்டை அல்லது பூந்தி கொட்டை – 250 கிராம்

சந்தனம் – 250 கிராம்

செய்முறை :

1. மேலே கொடுத்துள்ள பொருட்களில் பசுமையான பொருட்களை நிழலில் நன்கு உலர்த்தி காய வைத்து எடுக்கவும்.

2. பின்னர் சந்தனம் தவிர்த்து அனைத்து பொருட்களையும் மாவு மில்லில் கொடுத்து அரைத்து வாங்கவும். அரைத்தவற்றுடன் சந்தனம் சேர்த்து கலந்து எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு தினமும் தேவை படும் அளவு பொடி எடுத்து குளிக்க பயன்படுத்தவும்.

ஒரே வாரத்தில் பிரமிக்கத் தக்க அளவில் மாற்றத்தை நீங்கள் காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button