26.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
toothache
மருத்துவ குறிப்பு

இதோ அற்புதமான எளிய தீர்வு! கடைவாய்ப்பல் வலிக்கான சில சிறப்பான வீட்டு சிகிச்சைகள்..!

பொதுவாக 17-25 வயதில் தான் கடைவாய் பற்கள் தோன்றும். சில சமயம் அதற்கு மேலான வயதிலும் கூட தோன்றும். நம் வாயில் உள்ள நான்கு காற்பகுதியிலும் கடைசி அல்லது பின் பல்லாக இது இருக்கும். கடைவாய் பற்கள் தான் கடைசியாக தோன்றும் பற்களாகும்.

கடைவாய் பற்கள் கடைசியாக தோன்றுவதால், அவைகள் சரியாக வளர்வதற்கு உங்கள் வாயில் போதிய இடம் இருப்பதில்லை. பிற பற்களை தள்ளி விட்டோ அல்லது பிற பற்களுக்கு இடையே மாடிக் கொண்டோ தான் இது வளரும். ஈறுகளின் கீழ் ஒரு கோணத்தில் தான் இது வளரும். இதனால் பாதிக்கப்பட்ட கடைவாய் பல்லினால் வலி ஏற்படும், வீக்கமடையும், ஈறுகளில் எரிச்சல் உண்டாகும்.

 

வலியுடன் சேர்த்து சுவாச துர்நாற்றம், உணவுகளை கடிப்பதிலும் மெல்லுவதிலும் சிரமம், தலைவலி மற்றும் அருகிலுள்ள பற்களில் வலி போன்றவற்றை நீங்கள் அனுபவிக்க நேரிடலாம்.

கடைவாய் பல் எந்த ஒரு எச்சரிக்கையும் இன்றி, திடீரென தோன்றும் அல்லது மெதுவாக வளரும். அது தாங்க முடியாத வலியைக் கொடுக்கலாம். ஏன், அதனால் உங்கள் அன்றாட வேலைகள் கூட கெட்டுப் போகலாம். இந்த வலியை போக்க சில வீட்டு சிகிச்சைகள் உள்ளது. இருப்பினும், இந்த வலி மீண்டும் ஏற்பட்டால், பல் மருத்துவரை கொண்டு இந்த பல்லை பிடுங்கி எடுத்து விடுவது தான் சிறந்த வழியாக இருக்கும். சரி கடைவாய் பற்களினால் ஏற்படும் வலிகளை போக்கிடும் சில வீட்டு சிகிச்சைகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா…?

கிராம்பு

கடைவாய் பற்கள் மட்டுமல்லாது பிற பல் வலியை குறைக்க கிராம்பு பெரிதும் உதவுகிறது. இதில் உணர்வு இழப்பு குணமும் வலி நிவாரணி குணமும் உள்ளதால், இது வலியை மரத்து போக செய்யும். கூடுதலாக அதிலுள்ள ஆன்டி-செப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பி குணங்கள் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும்.

பயன்படுத்தும் முறை

கிராம்பு மற்றும் கிராம்பு எண்ணெய் என இரண்டையுமே பயன்படுத்தலாம்.

* பஞ்சுருண்டையை கொண்டு கொஞ்சம் கிராம்பு எண்ணெய்யை தொட்டு கொள்ளவும். பின் வலி ஏற்படுத்துகிற கடைவாய் பல் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈறுகளில் தடவவும். ஒரு நாளைக்கு 2-3 முறை செய்திடவும். கிராம்பு எண்ணெய் மிகவும் அடர்த்தியாக இருந்தால், சற்று ஆலிவ் ஈநெய் சேர்த்து அதனை நீர்த்துப் போக செய்யவும்.

* வலி எடுக்கும் கடைவாய் பற்களின் மேல் 2-3 முழு கிராம்பை வைத்து வாயை மூடிக் கொள்ளவும். கிராம்பு அதன் அதிமுக்கிய எண்ணெய்களை வெளியேற்ற தொடங்கியவுடன், உங்கள் வலிக்கு நிவாரணம் கிடைக்க தொடங்கும்.

* மற்றொரு சிகிச்சையும் உள்ளது – நசுக்கிய பூண்டு கிராம்பு 1, கொஞ்சம் உப்பு மற்றும் சிறிதளவு கிராம்பு எண்ணெய்யை கொண்டு பேஸ்ட் ஒன்றை தயார் செய்யவும். வீங்கிய ஈறுகளின் மீது அதனை பட்டையாக தடவவும். 5-10 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரை கொண்டு வாயை அலசுங்கள். இதனை தினமும் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யுங்கள்.

உப்பு

கடைவாய் பல் வலிக்கான மற்றொரு வீட்டு சிகிச்சையாக விளங்குகிறது உப்பு. ஈறுகளில் உள்ள அழற்சியை குறைக்கவும் தொற்றுக்களுக்கு எதிராக போராடி தடுக்கவும் இது உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

* 1 டீஸ்பூன் உப்பை வெதுவெதுப்பான நீரில் போடவும். அதனை வாயில் போட்டு, பல முறை கொப்பளிக்கவும். இது வலியையும் கிருமிகளையும் போக்கும்.

* உப்பையும் மிளகையும் சரிசமமான அளவில் கலந்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளவும். பாதிக்கப்பட்ட பல்லின் மீது இந்த பேஸ்ட்டை தடவவும். சிறிது நேரத்திற்கு அப்படியே அமரவும். வலி போகும் வரை இந்த சிகிச்சையை தினமும் 2-3 முறை பின்பற்றவும்.

பூண்டு

பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பயாட்டிக், அழற்சி எதிர்ப்பி மற்றும் இதர மருத்துவ குணங்கள் உள்ளதால், கடைவாய் பல்லின் வலிக்கு நிவாரணம் அளிக்க உதவும். வாயில் உள்ள பாக்டீரியா தொற்றுக்களை குறைக்கவும் தடுக்கவும் செய்யும்.

பயன்படுத்தும் முறை

* நசுக்கிய பூண்டை வலியெடுக்கும் கடைவாய் பல்லின் மீது வைக்கவும்.

* வலியில் இருந்து நிவாரணம் பெற 1-2 பூண்டை மெல்லவும் செய்யலாம்.

* மாறாக, நசுக்கிய 1-2 பூண்டுடன் கொஞ்சம் கறுப்பு உப்பை கலந்து ஒரு பேஸ்ட்டாக தயார் செய்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் அதனை தடவுங்கள். சில நிமிடங்களுக்கு பிறகு அதனை துப்பி விடவும்.

மேற்கூறிய ஏதேனும் சிகிச்சைகளை தினமும் ஒரு முறை அல்லது இரு முறை பின்பற்றினால் வலி குறையும்.

வெங்காயம்

வெங்காயத்தில் கிருமி நாசினிகள், பாக்டீரியா எதிர்ப்பிகள் மற்றும் நுண்ணுயிர்க் கொல்லி குணங்கள் உள்ளதால், அது பல் வலிக்கு நிவாரணம் அளித்து, தொற்றுக்களை உண்டாக்கும் கிருமிகளை அளிக்கும்.

பயன்படுத்தும் முறை

* வெங்காயத் துண்டுகளை சில நிமிடங்களுக்கு வாயில் போட்டு மெல்லவும்.

* வீக்கமும் வலியும் இருப்பதால் மெல்ல முடியவில்லை என்றால், சின்ன வெங்காய துண்டை நேரடியாக பாதிக்கப்பட்ட பல்லின் மீது வைத்திடவும்.

* வலியை குறைக்க இரண்டு சிகிச்சைகளில் ஒன்றை ஒரு நாளில் பல முறை செய்திடவும்.

கொய்யா இலைகள்

பல்வலியை போக்க சிறந்த மருந்தாக செயல்படுகிறது கொய்யா இலைகள். அதில் குயர்செட்டின் எனப்படும் பையோஃபிளாவனாய்டு உள்ளது. இதில் வலி குறைவு குணங்கள் நிறைந்துள்ளது. கூடுதலாக அழற்சி எதிர்ப்பி, நுண்ணுயிர்க் கொல்லி மற்றும் வலி நிவாரணி குணங்களை இது கொண்டுள்ளது.

பயன்படுத்தும் முறை

* 1-2 கொய்யா இலைகளை மெதுவாக மெல்லுங்கள். அதன் ஜூஸ் உங்கள் வாயில் மெல்ல இறங்கும். விரைவிலேயே கடைவாய் பல்லில் ஏற்பட்டுள்ள வலி நீங்கும்.

* மற்றொரு வழி – 4-6 கொய்யா இலைகளை 1 கப் நீரில் 5 நிமிடங்கள் வரை கொதிக்க வையுங்கள். அந்த நீரை வடிகட்டி, அதனை ஆற விடுங்கள். பின் அதனை மவுத் வாஷாக தினமும் 2 முறை பயன்படுத்தினால் கடைவாய் பல் வலி குறையும்.

புதினா

கடைவாய் பல் வலியை போக்க மற்றொரு பழமை வாய்ந்த சிறந்த சிகிச்சையாக விளங்குகிறது புதினா. இந்த செடியில் உணர்வு இழப்பு குணங்கள் வளமையாக உள்ளதால், வலியை போக்க உதவும். கூடுதலாக, தொற்றுக்களை உண்டாக்கும் வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கவும் உதவும்.

பயன்படுத்தும் முறை

* வலி உள்ள இடத்தில் கொஞ்சம் புதினா எண்ணெய்யை தடவவும். சிறிது நேரம் கழித்து வாயை வெதுவெதுப்பான உப்பு தண்ணீரில் அலசவும்.

* 1 டீஸ்பூன் காய்ந்த புதினா இலைகளை 1 கப் வெந்நீரில் போடவும். 15-20 நிமிடம் வரை அதனை மூடி வையுங்கள். இந்த நீரை வாயில் போட்டு, 30 நொடிகளுக்கு கொப்பளித்து, பின் துப்பி விடவும். மீதமுள்ள நீரையும் அப்படியே செய்யவும்.

* இரண்டு சிகிச்சைகளில் ஒன்றை, ஒரு நாளைக்கு 2-3 முறை செய்தால், வலி குறையும்.

பெருங்காயம்

கடைவாய் பல் வலியை போக்க மற்றொரு பழமை வாய்ந்த ஆயுர்வேத சிகிச்சையாக விளங்குகிறது பெருங்காயம். இதில் அழற்சி எதிர்ப்பி, பாக்டீரியா எதிர்ப்பிகள் மற்றும் வலியை குறைக்கும் குணங்கள் அடங்கியுள்ளது. இந்த அனைத்தும் சேர்ந்து பல் வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக இதை மாற்றியுள்ளது.

பயன்படுத்தும் முறை

* சிறிதளவு பெருங்காயத்தை பல் வலிக்கும் இடத்தில் போட்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

* 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தை 2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூசுடன் கலந்து அதனை லேசாக சுட வைக்கவும். பஞ்சுருண்டையை கொண்டு அந்த நீரில் முக்கி, வலி இருக்கு கடைவாய் பல்லின் மீது தடவவும்.

* மேற்கூறிய ஏதேனும் முறையை ஒரு நாளைக்கு சில முறை செய்து வந்தால் வலி நீங்கும்.

சேஜ்

சேஜ் என்பது இயற்கையான வலி நிவாரணியாகும். கடைவாய் பல் வலிக்கு இது உடனடி நிவாரணத்தையும் அளிக்கும். இந்த மூலிகையில் ஆன்டி-பயாட்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பி குணங்கள் நிறைந்துள்ளதால், பல் ஈறு அழற்சி, வாய் புண் மற்றும் ஈறு இரத்த கசிவு போன்ற பல்வேறு பல் பிரச்சனைகளை குணப்படுத்தும்.

பயன்படுத்தும் முறை

1. சின்ன டம்ளரில் 2 டீஸ்பூன் காய்ந்த, நசுக்கிய சேஜ் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அத்துடன் விஸ்கி அல்லது வோட்காவை ஊற்றுங்கள். 5 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். இந்த கலவையை வாயில் ஊற்றி, சில நிமிடங்களுக்கு கொப்பளிக்கவும். பின் துப்பி விடுங்கள். மீதமுள்ளதையும் அதே போல் செய்யுங்கள். வலி குறையும் வரை இதனை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்யவும்.

வெண்ணிலா எசன்ஸ்

வெண்ணிலா எசன்ஸில் குறைந்த அளவிலான அல்கஹாலும் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்களும் உள்ளன. இது கடைவாய் பல வலியை குறைக்கும்.

பயன்படுத்தும் முறை

3-4 சொட்டு வெண்ணிலா சாரத்தை பஞ்சுருண்டையில் முக்கி, வலிருக்கும் இடத்தில் தடவவும். சில நிமிடங்களுக்கு வலி இருக்கும் இடத்தில் பஞ்சுருண்டையை அப்படியே வைத்திருக்கவும். வலி குறையும் வரை இதனை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்யவும்.

குறிப்பு: வெண்ணிலா எசன்ஸ் என்பது சமையலுக்கு பயன்படுத்தப்படும் வெண்ணிலா எசன்ஸ் கிடையாது.

கோதுமை புல்

கடைவாய் பல் வலிக்கு மற்றொரு இயற்கையான சிகிச்சையாக விளங்குகிறது கோதுமை புல். இயற்கையான ஆன்டி-பயாட்டிக்காக செயல்படுவதால், வாயில் உள்ள பாக்டீரியா மற்றும் நச்சுக்களை கோதுமை புல் நீக்கும். இதனால் வலி குறையும்.

பயன்படுத்தும் முறை

* நற்பதமான கோதுமை புல்லை மெதுவாக மெல்லவும். கொஞ்ச நேரம் கழித்து அதை துப்பி விடவும். வழியில் இருந்து விஆரனம் கிடைக்க வேண்டும் என்பதால் இதை தொடரவும்.

* மாறாக, கோதுமை புல்லில் இருந்து எடுக்கப்படும் ஜூசை, வலி போகும் வரை, மவுத் வாஷாக ஒரு நாளைக்கு பல முறை பயன்படுத்தவும்.

கூடுதல் டிப்ஸ்…

* பாதிக்கப்பட்ட கடைவாய் பல் இருக்கும் பகுதியை நோக்கி கன்னத்தில் ஐஸ் பேக் வைத்தால் வலி குறையும்.

* பாதிக்கப்பட்ட கடைவாய் பல்லின் மீது வெட்டியா சீஸ் துண்டை வைத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

* சர்க்கரை இல்லாத சூயிங் கம்மை உணவிற்கு பிறகு மெல்ல மென்றால், எச்சில் ஊக்குவிக்கப்பட்டு, தொற்றுக்களை எதிர்த்து போராடும்.

* வாய் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எண்ணெய்யை கொண்டு வாயை கொப்பளிப்பது மற்றொரு சிறந்த தேர்வாகும்.

* பாக்டீரியா எதிர்ப்பி மவுத் வாஷை பயன்படுத்தி அழற்சியை குறைக்கலாம்.

கூடுதல் டிப்ஸ்…

* கடினமான உணவை மெல்லாதீர்கள்.

* பற்களையும் நாக்கையும் சீரான முறையில் துலக்கவும். பற்களுக்கு இடையே உள்ள அழுக்குகளை எடுக்கவும்.

* தொற்றுக்களை தடுக்க உங்கள் உணவில் சர்க்கரையின் அளவை குறைக்கவும்.

* நாள் முழுவதும் அதிகளவிலான தண்ணீரை பருகுங்கள்.

* அமைதியாக இருப்பதும் ஆழமாக மூச்சு விடுவதும் கூட கடைவாய் பல் வலிக்கு உதவும்.

இந்த சிகிச்சைகள் தற்காலிக வலி நிவாரணத்தை தான் அளிக்கும். இருப்பினும் நீங்கள் உங்கள் பல் மருத்துவரை அணுக அவேண்டும். உங்கள் பற்களை பரிசோதித்த பின்னர், மேலும் சிகிச்சைகளை தேவைப்படுமா என மருத்துவர் பரிந்துரைப்பார்.

Related posts

காய்ச்சலுக்கான அட்டகாசமான 10 வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

பெண்களே கட்டாயம் இதை படிங்க! சானிட்டரி நாப்கின்கள் பிறப்புறுப்பு புற்றுநோயை ஏற்படுத்துமா?

nathan

உங்க குழந்தை எப்போ பார்த்தாலும் மூக்குல கைவிடுறானா? கட்டாயம் இதை படியுங்கள்!

nathan

தைராய்டு பிரச்சினைக்கு என்ன பரிசோதனை?

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! உடம்பில் உண்டாகும் கொழுப்பு கட்டியை எளிதில் கரைக்க வேண்டுமா?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! தைரொய்ட் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா……

nathan

தெரிஞ்சிக்கங்க…தமனிகளில் அடைப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் ஆச்சரியப்பட வைக்கும் சில அறிகுறிகள்!!!

nathan

நீர்ச்சத்து குறைவும்… பாத வெடிப்பும்..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

யாழ். குடாநாட்டு நீரில் நைத்திரேற்று அதிகரிப்பை தடுப்பதற்கு -சு.சரவணன்

nathan