உடலுழைப்பு இல்லாமை, உண்ணும் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கம் போன்ற பல விஷயங்கள் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவெனில், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்டால் இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் குடலில் உள்ள நுண்ணுயிர் விரைவாக மாறிவிடும்.
அப்படி குடலில் உள்ள நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய ஓர் அற்புதமான வீட்டு வைத்தியம் ஒன்று உள்ளது.
அது தான் உலர் திராட்சையை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது. இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.
கெட்ட பாக்டீரியாவை அழிக்கும்
தயிருடன் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடும் போது, செரிமான மண்டலத்தில் இடையூறை உண்டாக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படும். அதோடு கெட்ட பாக்டீரியாக்கள் தான் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் காரணமும் கூட.
நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்
தயிருடன் உலர் திலாட்சையை சேர்த்து சாப்பிடும் போது, அது குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி, உள்ளுறுப்புக்களை சீராக செயல்பட வைக்கும்.
குடல் அழற்சியைக் குறைக்கும்
அதிக கொழுப்புள்ள மற்றும் காரமான உணவுகளை உண்பது பெரும்பாலும் குடலின் சுவர் பகுதியில் அழற்சியை ஏற்படுத்தும். உலர் திராட்சையை தயிருடன் சேர்த்து சாப்பிடும் போது, குடலில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவிபுரியும்.
ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகள்
குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அது வாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், மதியம் உணவு உண்ட பின் தயிரில் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடுங்கள்.
எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
வெதுவெதுப்பான பால் – ஒரு பௌல்
கருப்பு உலர் திராட்சை – சிறிது
தயிர் அல்லது மோர் – அரை டீபூன்
செய்முறை
ஒரு பௌல் வெதுவெதுப்பான பாலில் 4-5 உலர் திராட்சையைப் போட்டு, அதில் அரை டீபூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து குறைந்தது 8-12 மணிநேரம் ஊற வைக்கவும். அதன்பின் இதை சாப்பிடவும்.