Other News

ரூ.1 கோடி ஊதியத்தை உதறிவிட்டு கணவருடன் உருவாக்கிய நிறுவனம்

கொல்கத்தாவைச் சேர்ந்த வினிதா சிங் மற்றும் கௌசிக் முகர்ஜி தம்பதியினருக்குச் சொந்தமான சுகர் காஸ்மெட்டிக்ஸ், குறுகிய காலத்தில் ரூ.4,000 கோடி சந்தை மூலதனத்தை எட்டியுள்ளது.

வினிதா சிங் மற்றும் கௌசிக் முகர்ஜி ஆகியோர் 2015 இல் தங்கள் நிறுவனமான SUGAR Cosmetics ஐ நிறுவினர். இதுதவிர ‘ஷார்க் டேங்க் இந்தியா’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் வினிதா சிங்.

 

ஐஐடி மெட்ராஸில் பொறியியல் பட்டம் பெற்றவர். இருவரும் எம்பிஏ படிக்கும் போது சந்தித்தனர், பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் மெக்கின்சி அண்ட் கம்பெனியில் பணிபுரிந்த கராசிக், 2011ல் வினிதாவை மணந்தார். 2015 இல் நிறுவப்பட்ட SUGAR அழகுசாதனப் பொருட்கள் அந்த ஆண்டில் மட்டும் $5.2 மில்லியன் லாபம் ஈட்டியுள்ளன.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]23 65342ef491382

விற்பனை சதவீதம் அதிகரிக்க 2017ல் 11 கோடி என பதிவு செய்த நிலையில் 2020ல் விற்பனை 105 கோடியை எட்டியது. தொடர்ந்து 2022ல் 50 மில்லியன் டொலர் முதலீடு ஈர்த்த நிலையில், தற்போது SUGAR Cosmetics நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4,000 கோடி என்றே கூறப்படுகிறது.

 

மெட்ராஸ் ஐஐடியில் பொறியியல் பட்டதாரியான வினிதாவுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில் வேலை வாய்ப்பு வந்தாலும் அதை மறுத்து தனது கனவுத் திட்டமான ‘சுகர் காஸ்மெட்டிக்ஸ்’ கணவருடன் இணைந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button