சோர்வாக இருக்கும்போது உங்கள் மனதை புத்துணர்வாக்க பல்வேறு வழிகள் உள்ளன. சரி உங்கள் மனதை ஊக்குவிக்க என்ன செய்யலாம்? உண்மை என்னவென்றால் உங்கள் குழந்தைகளுடன் செலவிடுவதை விட மகிழ்ச்சியான ஒன்று என்று எதுவும் கிடையாது. அது உங்கள் குழந்தைகளோ அல்லது அக்கம் பக்கத்துக்கு குழந்தைகளோ, உங்களை மகிழ்விப்பதில் அவர்கள் தவறுவதே இல்லை.
இசையைக் கேட்பது அல்லது சிரிப்பது உங்கள் சோர்வைக் குறைக்கலாம் ஆனால் விளையாட்டும் இதில் முக்கிய பங்காற்றுகிறது. உங்களுடைய எண்ணம் மற்றும் உடல் மற்றும் உங்கள் சமூக நலனுக்கும் இது நல்ல பங்காற்றும். குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை வீண் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம்.
Why Playing With Your Kids is Very Important
விளையாட்டு ஒரு மகிழ்வான விஷயம் என்பதோடு ஈடுபாட்டையும் ஊக்குவிக்கக் கூடியது. பலன்களை அடைவதில் சிந்தித்தலை விட செயல்படுதல் மிகவும் முக்கியமான ஒன்று. பெற்றோராக உங்கள் குழந்தைகளோடு விளையாடுவது நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்று. விளையாட்டு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும்.
பொதுவாக விளையாட்டு என்ற சொல் பெரும்பாலும் பயனற்ற சிறிய விஷயமாகப் பார்க்கப் படுகிறது. அது ஒரு சிற்றின்பமாகக் கூட பார்க்கப் படுவதுண்டு. உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பொறுப்புக்களுக்கிடையே விளையாட்டிற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இளைப்பாருங்கள்
எண்ணிலடங்கா பல்வேறு விஷயங்கள் நம்மை தொய்வடையவும் எரிச்சலூட்டவும் செய்கின்றன. எனவே உங்கள் மனச்சோர்வைப் போக்க ஒரு குழந்தையை தோழனாக்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவோர் அதன் மூலம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிறைய ஏற்படுவதாக நம்புகின்றனர்.
Why Playing With Your Kids is Very Important
குழந்தைகளுடன் விளையாடுவது, அது உங்கள் சகோதர சகோதரிகளின் பிள்ளைகளோ அல்லது உங்கள் நண்பர்களின் குழந்தைகளோ, உங்களை இளைப்பாறச் செய்யும் (உங்களை ஊக்கம் கொள்ளச் செய்யும்). குழந்தைகளுடன் விளையாடுவது மகிழ்ச்சியைத் தருவதால் உங்கள் மனம் புத்துணர்ச்சி பெற்று சோர்விலிருந்து விடுபடுவீர்கள்.
பொறுமை
இந்த விளையாட்டுக்கள் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உடல் திறனையும், அறிவு மற்றும் உணர் திறனையும் மேம்படுத்துகின்றன. உங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட நீங்கள் விரும்பினால் அவர்களுடைய மகிழ்ச்சியான பொழுதுகளில் அவர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவற்றை திணிக்க முயலாதீர்கள்.
வயதில் மூத்தவராக அவர்கள் செய்கைகளை அவர்களே கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடிவெடுக்கவும் அனுமதியுங்கள். உங்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தில் நீங்கள் பொறுமையையும் புரிதலையும் கற்றுக்கொள்வதால் இது ஒரு முக்கிய பங்காற்றுகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்கும்
குழந்தைகளுடன் விளையாடும்போது ஏற்படும் பந்தம் நெடுநாள் வரை நீடித்திருக்கும். அது அவ்வப்போது தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கவலைகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.
மேலும் இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது கடும் மன நெருக்கடியில் உள்ள பெரியவர்களுக்கு குழந்தைகளுடன் செலவிடும் நேரம் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது என்பதுதான்.
ஆக்சிடோசின் அளவுகள் அதிகரிக்கின்றன
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாடுவது இருவருக்குமே மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இடையே காணப்படும் சமூக மற்றும் உணர்வு சார்ந்த நடத்தைகள் மற்றும் அவர்களிடையே காணப்படும் பந்தம் ஆகியவற்றில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது, அது மனதிற்கு ஆறுதலையும் அமைதியையும் தருவதாகக் கருதப்படுகிறது.
ஆரோக்கியம் மற்றும் சுறுசுறுப்பு
குழந்தைகளுடனான விளையாட்டு உங்கள் மனத்திற்குத் தெம்பைத் தருவதோடு மட்டுமல்லாமல் உங்களை மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது. ஒரே இடத்தில் அசையாமல் இருந்துகொண்டோ அல்லது டிவியை பார்த்துக் கொண்டோ இருப்பவர்களுக்கு அந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வரவும் இது உதவுகிறது.
புதிய சிந்தனைகள்
உங்கள் நண்பர்களோடானாலும் சரி அல்லது உடன் பணிபுரிபவர்கள் உடனானாலும் சரி விளையாடுவது மிகவும் அவசியமானதாகிறது. ஏனென்றால் அது மனச்சோர்வை நீக்குகிறது. உங்கள் குழந்தைகளுடன் விளையாடுவது உங்கள் கற்பனைத் திறனை தூண்டி புதிய சிந்தனைகளை வாழ்வில் புகுத்துகிறது. இது மன ஆரோக்கியத்தை மேம்படவும் வைக்கிறது.
நினைவுக் கோளாறுகளை சரி செய்யும்
நாம் வளர வளர மெல்ல விளையாடுவதைக் குறைத்து விடுவோம் எனினும் விளையாட்டு உங்களை இளமையாகவும் மூளையை சுறுசுறுப்பாகவும் வைக்க உதவும்.
சதுரங்கம் (செஸ்) அல்லது புதிர் போட்டிகளை குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதால் மூளைக்கு சவால் வைத்து சுறுசுறுப்பாக்குகிறது. மேலும் ஞாபக சக்தி தொடர்பான சிக்கல்களையும் சரி செய்கிறது.
மற்றவர்களின் மீது அக்கறை கொள்ளுதல்
குழந்தைகளுடன் விளையாடுவது மற்றவர்களுடனான உங்கள் உறவை மேம்பாடாகி செய்யும். முகம் தெரியாதவர்களிடமும் தடையின்றி பழகவும் அவர்கள் மீது பரிவு கொள்ளவும் வழி செய்யும்.
இப்ப புரியுதுங்களா ஏன் குழந்தைகளோட விளையாடணும்னு?