சிறந்த பெற்றோர் என்றால் நல்ல கல்வி, நல்ல உணவு, உடையை பிள்ளைகளுக்கு தருவது மட்டுமல்ல. ஒழுக்கம், சமூகத்தில் நல்லப்படியாக வளர்ப்பது, சமூகத்தையும், மக்களையும் படிக்க கற்று தருவது. நால்வர் முன் எப்படி பழக வேண்டும், பேச வேண்டும் என சமுதாயத்தில் வாழ கற்றுக் கொடுப்பது என ஒரு முன்மாதிரியாக திகழ வைக்க வேண்டும். அதில் தான் ஓர் சிறந்த பெற்றோரின் அடையாளம் இருக்கிறது.
நீங்கள் வளர்ந்து வந்த விதம்!
உங்கள் பெற்றோர் உங்களை எப்படி எல்லாம் வளர்த்தனர், அவர்கள் உங்களை வளர்க்கும் போது சந்தித்த சிரமங்கள். அந்த சிரமங்களை அவர்கள் நேரிட காரணம் என்ன, அதை அவர்கள் எப்படி தவிர்த்தார்கள், தாண்டி வந்தார்கள்.
நீங்கள் அதிலிருந்து எப்படி சிறப்பாக செயலாற்ற முடியும் என்பதை எல்லாம் நினைவுக் கூர்ந்து சரியாக செயல்பட வேண்டும்.
பெற்றோர் அறிவுரை!
நீங்கள் வளர்ந்து வந்த ஒவ்வொரு பருவத்திலும், உங்கள் பெற்றோர் நிறைய அறிவுரைகள் கூறி இருப்பார்கள். சமூகத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், உறவினர் வீட்டிற்கு சென்றால் எப்படி இருக்க வேண்டும், மரியாதை அளிக்க மறவாமை என உங்களுக்கு கூறப்பட்ட அறிவுரைகளில் நல்லவை மற்றும் சிறந்தவை உங்கள் குழந்தைகளிடம் கூற மறக்க வேண்டாம்.
கடுமையாக இருக்க வேண்டாம்!
உங்கள் பெற்றோருடன் இருந்து நல்லவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். சிலர் பெற்றோர் அடக்கமாக வளர்க்கிறேன் என ஊர் தெரியாமல் வளர்த்து விடுவார்கள். எனவே,, உங்கள் பெற்றோர் செய்த தவறுகளை ஒதுக்கிவிடுங்கள். அதே கடுமையை உங்கள் குழந்தைகளிடமும் காட்ட வேண்டாம்.
கனவுகள்!
உங்கள் பெற்றோர் அவர்களது கனவுகளை உங்கள் மீதி திணித்தார்கள் என, உங்கள் கனவுகளை, உங்கள் குழந்தைகள் மீது திணிக்க வேண்டாம். ஒரே தவறை தலைமுறை, தலைமுறையாக பின்பற்றாமல், செய்யாமல். நீங்கள் அதை திருத்தி, உங்கள் பிள்ளையின் கனவுக்கு நல்வழி காண்பியுங்கள்.
காதல்!
காதல் என்றால் உடனே பருவம் அடைந்த ஆண், பெண் ஈடுபடும் உறவு என்றில்லாமல். அந்த பார்வையை மாற்றி. அனைவர் மீதும் அன்பு செலுத்தும் காதலை பற்றி கற்றுக் கொடுங்கள். காதலின் உண்மை முகம் என்ன என்பதை எடுத்துக் காட்டுங்கள். இது தான் ஒரு தலைமுறையை சிறந்த வழியில் செல்ல உதவும்.
நேரத்தின் வலிமை, நேரத்தின் மதிப்பு போன்றவற்றை கற்பியுங்கள். நேரம் தவறாமை தான் எல்லா விதத்திலும் ஓர் மனிதனை முன்னேற்றம் அடைய செய்யும். வேலை, படிப்பு என்று மட்டுமில்லாமல், சரியான நேரத்தில் உண்பதில் இருந்து, உறங்குவது வரை என அனைத்திலும் நேரம் தவறாமை பற்றி அறிவு புகட்டுங்கள்.