24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
chow chow kootu
சமையல் குறிப்புகள்

சுவையான சௌ செள கூட்டு

மதிய வேளையில் மிகவும் ஈஸியான, அதே சமயம் ஆரோக்கியமான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைத்தால், சௌ சௌ கூட்டு செய்து சாப்பிடலாம். அதிலும் திங்கட்கிழமைகளில் இந்த கூட்டு செய்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் ஞாயிற்று கிழமையில் நன்கு காரசாரமாக உட்கொண்டிருப்பதால், திங்கட்கிழமைகளில் சற்று காரம் குறைவாக சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

இங்கு அந்த சௌ சௌ கூட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து பாருங்கள்.

Chow Chow Kootu
தேவையான பொருட்கள்:

சௌ சொள – 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
துவரம் பருப்பு – 1 கப்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகம் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் வெங்காயம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

பின் அதில் சௌ சௌ காய், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் வேக வைத்துள்ள பருப்பை மசித்து சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சௌ சௌ கூட்டு ரெடி!!!

Related posts

சுவையான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ

nathan

செட்டிநாடு இட்லி பொடி

nathan

சுவையான காளான் மஞ்சூரியன்

nathan

சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிட சோயா கைமா ரெடி…..

sangika

சுவையான சுவையான சோமாஸ்!…

sangika

பூசணி சாம்பார்

nathan

சுவையான கொங்குநாடு மட்டன் குழம்பு

nathan

சுவையான தேங்காய்பால் தக்காளி சாதம் – சுவையாக செய்வது எப்படி?

nathan

தக்காளி கெட்சப் பாஸ்தா!

nathan