24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
11 coconut rice
ஆரோக்கிய உணவு

சுவையான சிம்பிளான… தேங்காய் சாதம்

அலுவலகம் செல்லும் போது காலையில் வெரைட்டி ரைஸ் செய்வது தான் மிகவும் சிறந்தது. இதனால் காலை உணவுடன், மதிய உணவு செய்வதும் முடிந்தது. அத்தகைய வெரைட்டி ரைஸில் பல வெரைட்டிகள் உள்ளன. இங்கு அவற்றில் ஒன்றான தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

இந்த ரெசிபியானது பேச்சுலர்களுக்கு ஏற்றது. மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியதும் கூட. சரி, இப்போது தேங்காய் சாதத்தை எப்படி சிம்பிளாக செய்வதென்று பார்ப்போமா!

Simple Coconut Rice Recipe
தேவையான பொருட்கள்:

சாதம் – 1/2 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
முந்திரி – 5
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து, சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கினால், தேங்காய் சாதம் ரெடி!!!

Related posts

தெரிஞ்சிக்கங்க…இந்த கருப்புநிற உணவுப் பொருள்களை இனி தேடி தேடி சாப்பிடுங்க!

nathan

சின்ன சின்ன மருத்துவ நடைமுறைகளையும் கடைபிடித்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்!…

sangika

உங்களுக்கு தெரியுமா பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் என்று?

nathan

கட்டாயம் இதை படியுங்கள் உடலுக்கு நன்னை செய்யும் வெங்காய தாள்

nathan

கொலஸ்ட்ராலை குறைக்கும் சத்தான ஆப்பிள் ரசம்

nathan

சுவையான சேமியா உப்புமா

nathan

எது நல்ல உணவு? நமக்கான ஃபுட் ரூல்ஸ்!

nathan

சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு

nathan

சத்து பானம்

nathan