23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
8 bitter gourd juice
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…தினமும் சிறிது பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பாகற்காய் என்றாலே பாதி பேருக்கு முகம் அஷ்ட கோணத்தில் செல்லும்; குறிப்பாக குழந்தைகளுக்கு. அதற்கு காரணம் அதிலுள்ள கசப்புத் தன்மை தான். ஆம், கசப்பு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பாகற்காய் தானே. ஆனாலும் கூட அதில் பல மருத்துவ குணங்கள் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்? நம் வயிற்றில் உள்ள புழு பூச்சிகள் சாவதற்கு பாகற்காயை உண்ணச் சொல்லி நம் வீட்டில் பெரியவர்கள் நம்மை வலியுறுத்துவார்கள். நம்மில் பல பேருக்கு அதன் நன்மை அது வரைக்கும் மட்டுமே தெரிந்திருக்கும்.

 

பாகற்காயில் மருத்துவ குணங்கள் பல உள்ளது, அதனால் தான் என்னவோ அதனை பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். கசப்பான சுவையை கொண்டு, பார்க்க அசிங்கமாக இருந்தாலும் கூட, ஆரோக்கியமான இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், அது உங்களை பல வகையான நோய்களில் இருந்து பாதுகாக்கும். அவை என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் குடிப்பதற்கான முதன்மையான 8 காரணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா!

 

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்

மூன்று நாட்களுக்கு ஒரு முறை, காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்தால் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். பாகற்காயில் உள்ள மோர்மோர்சிடின் மற்றும் சரடின் என இரண்டு ஆன்டி-ஹைபர் க்ளைசீமிக் பொருட்கள், தசைகளுக்கு இரத்த சர்க்கரையை கொண்டு செல்லும் முக்கிய வேலையை செய்கிறது. பாகற்காயின் விதைகளில் பாளிபெப்டைட்-P இண்டுளின் போன்ற ஒன்றை சுரக்க உதவும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்திடும்.

பசியை அதிகரிக்கும்

சரியாக பசிக்கவில்லை என்றால் சரியான ஊட்டமளிப்பு இருக்காது. இதனால் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் அதிகரிக்கும். அதனால் சீரான முறையில் பாகற்காய் ஜூஸை குடியுங்கள். இதனால் செரிமான அமிலம் சுரப்பதை மேம்படுத்த இது உதவிடும். இதனால் உங்கள் பசியும் அதிகரிக்கும்.

கணைய புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிடும்

தினமும் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கணைய புற்றுநோய் அணுக்கள் திறம்பட அழியும். அதற்கு காரணம் அதிலுள்ள புற்றுநோய் எதிர்ப்பி பொருட்கள், கணைய புற்றுநோய் அணுக்கள் க்ளுகோசை மெட்டபாலைஸ் செய்வதை தடுக்க செய்யும். இதனால் அணுக்களுக்கு வர வேண்டிய ஆற்றல் திறன்கள் வராமல் அவை அழிந்து விடும்.

தோல் அழற்சி அறிகுறிகளில் இருந்து நிவாரணம்

ஒரு கப் பாகற்காய் ஜூஸ் உடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை ஜூஸை கலந்து கொள்ளவும். இந்த பானத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். இதனை 3-6 மாதம் வரை தொடரவும். அப்படி செய்கையில் அது உங்கள் சரும அழற்சிக்கு எதிராக போராடும். மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து, தோல் அழற்சி இயற்கையாகவே குணமடைய உதவும்.

கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும்

தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்தால், கல்லீரல் வலுவடைந்து மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கும். மேலும் உங்கள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி புத்துணர்வை பெறும். இதனால் ஈரலின் செயல்பாடு மேம்பட்டு, கல்லீரல் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

பாகற்காய் ஜூஸ் மந்தமான செரிமான அமைப்பை ஊக்குவித்து, செரிமானமின்மைக்கு சிகிச்சை அளிக்கும். அதற்கு முக்கிய காரணமே செரிமானத்திற்கு தேவையான அமிலத்தை சுரக்க அது உதவிடும். இதனால் செரிமானமும் மேம்படும். அதனால் செரிமானம் திறம்பட நடக்க, வாரம் ஒரு முறை, காலையில் பாகற்காய் ஜூஸை குடியுங்கள்.

கண் பார்வையை மேம்படுத்தும்

சீரான முறையில் பாகற்காய் ஜூஸை குடித்து வந்தால், கண் பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் அண்டாமல் இருக்கும். பாகற்காயில் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ வளமையாக உள்ளது. கண் பார்வை திறம்பட செயல்பட இவைகள் முக்கிய பங்கை வகிக்கிறது. இதுப்போக, பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், விஷத்தன்மையுள்ள அழுத்தத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

பாகற்காய் ஜூஸ் இயற்கையான இரத்தத்தை சுத்திகரிப்பானாக செயல்படுவதால், நச்சுகளை வெளியேற்றி, உடலில் உள்ள இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும். அதனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸை குடியுங்கள். இதனால் இரத்தம் சுத்தமாகி, பருக்கள் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படாது.

Related posts

இந்தியாவை ஏமாற்றி வந்த பெப்ஸி, கோலாவின் பித்தலாட்டம் அம்பலம்!

nathan

உங்களுக்கு தெரியுமா ரத்தத்தில் இரத்த தட்டுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் சிறந்த உணவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சப்போட்டா! எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

க்ரில் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?

nathan

சேலம் ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி

nathan

சூப்பர் டிப்ஸ் ! உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க தினம் பாதாம் உண்ணுங்கள்…!

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தையுடன் பயணிக்கும் போது எடுத்துச் செல்ல வேண்டிய வீட்டு உணவுகள்!!!

nathan

உங்களுக்கு என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடையை மட்டும் அதிகரிக்க முடியவில்லையா? இதை முயன்று பாருங்கள்..

nathan