30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1ulcers
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிப்பது ஆரோக்கியமானது?

முதலில் காபி கொட்டைகளை சுவைத்தது ஆட்டு மந்தைகள் என அறிஞர்கள் கூறுகின்றனர். நாங்க சும்மா சொல்லல! 9 ஆம் நூற்றாண்டில், காபி கொட்டைகளை உட்கொண்ட ஆடுகள் குதூகலமாக மாறியதை அதன் ஆடு மேய்ப்பவர் ஒருவர் கவனித்துள்ளார். அன்று பிறந்தது தான் இந்த வரலாற்று சிறப்பு மிக்க பானம். பல நூற்றாண்டுகளாக காபி இருந்து வந்துள்ளது. மேலும் உலகத்தில் உள்ள பலராலும் விரும்பி பருகக் கூடிய பானமாக இது விளங்கியுள்ளது.

 

காபியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. மேலும் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக விளங்குகிறது. நம் மூளைக்கும் அது நல்லதாகும். மேலும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்து, உடல் எடை குறைவதை எதிர்த்து போராடும். ஆனால் எல்லாம் அளவாக இருந்தால் தானே ஆரோக்கியம்! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே. சரி, அப்படியானால் ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிப்பது ஆரோக்கியம்?

 

ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் படி, ஒரு நாளைக்கு 400 மி.கி. அளவிலான காப்ஃபைன் குடிப்பது பெரியவர்களுக்கு பாதுகாப்பானது. இது ஒரு நாளைக்கு 3-4 கப் வரை வரும். இளைஞர்கள் என்றால் ஒரு நாளைக்கு 100 மி.கி. என்ற அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படியானால் ஒரு நாளைக்கு 1 கப் மட்டுமே.

 

உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 225 கோடி கப் காபி குடிக்கப்பட்டு வரும் இந்த வேளையில், அதன் பயன்களை தெரிந்து கொள்வது அனைவருக்கும் முக்கியமாகும். நாங்கள் ஏற்கனவே சொன்னதை போல் எதையுமே அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஆபத்தே! அதனால் தான் எத்தனை கப் வரை குடித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதை பற்றி பார்க்கப் போகிறோம்.

சராசரியாக 500-600 மி.கி. வரையிலான காப்ஃபைன் உங்கள் உடலமைப்பை சீர்குலைக்க ஆரம்பித்துவிடும். அதன் விளைவுகளும் மோசமாகவே இருக்கும். அதிகமான அளவில் காப்ஃபைன் உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்களை பார்க்கலாம்.

அதிகரிக்கும் இதயத்துடிப்பு

இதயகுழலிய ஆரோக்கியத்தின் மீது காப்ஃபைனின் தாக்கங்கள் ஒரு ஊக்குவிக்கியாக செயல்படும். உங்கள் நரம்பியல் அமைப்பில் பதற்றத்தை ஏற்படுத்தும். இதனால் ஊக்குவிக்கப்பட்ட நிலைக்கு உங்கள் இதயம் செயல்பட அது அழுத்தத்தை போடும். இதனால் உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கும். இதய பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது பெரும் ஆபத்தாக விளங்கும். அதனால் குறிப்பிட்ட அளவில் மட்டும் காபி குடித்து ஆரோக்கியமாக இருங்கள்.

பதற்றமும் அமைதியின்மையும்

காபி குடித்தால் தூக்கம் களையும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அதன் பின்னணி என்ன என உங்களுக்கு தெரியுமா? அதிகளவிலான விழிப்புணர்வு, அதிகரிக்கும் இதயத் துடிப்பு மற்றும் அட்ரினாலின் அதிகரிப்பு ஆகியவைகள் உங்களின் பதற்றத்தை அதிகரிக்கும். காபியின் மோசமான உடல்நல தாக்கங்களின் ஒன்று – உங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி, இயல்பான சூழ்நிலைகளிலும் உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கும்.

தலை வலி

காபியினால் பல வகையான உடல்நல தாக்கங்கள் இருந்தாலும், அதனை அதிகமாக பருகும் போது உங்கள் மூளை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, அதனால் தொடர்ச்சியாக தலை வலி ஏற்படும். இது ஒரு ஊக்குவிக்கியாகவும், சிறுநீர்ப் பிரிப்பியாகவும் செயல்படுகிறது. அதனால் மூளை அதிக நேரம் வேலை செய்யும் சூழல் உருவாகும். அதனால் தான் தலை வலி ஏற்படுகிறது.

எரிச்சல்

சில கப் காபியை பருகிய பிறகு, உங்களுக்கு சீக்கிரத்திலேயே எரிச்சல் ஏற்படுகிறதா? அல்லது எளிதில் உணர்ச்சிவசப்படுகிறீர்களா? அப்படியானால் காபி குடிக்கும் அளவை நீங்கள் குறைக்க வேண்டும். உங்கள் மூளையை காப்ஃபைன் ஊக்குவித்து நம் பலன் உணர்வில் வெளிப்படையாக ஊக்கம் அதிகரிக்கும். அதனால் லேசாக தூண்டி விட்டாலும் நமக்கு எளித்தில் எரிச்சல் ஏற்படும். காபியை நிறுத்த முயற்சிப்பவர்களுக்கும், அவர்கள் காப்ஃபைன் உட்கொள்வதில் இருந்து பின்வாங்குவதால், அதுவும் எரிச்சலை உண்டாக்கும்.

தூங்குவதில் சிரமம்

காபி குடிப்பது உங்களை விழித்திருக்கச் செய்யும். அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது உங்கள் தூக்க சுழற்சியை பாதிக்கும் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இரவு நேரத்தில் போதிய தூக்கம் கிடைப்பதில்லை. அதற்கு காரணம் நீங்கள் அளவுக்கு அதிகமாக காபியை நம்பியிருப்பதால் தான்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பதை சிறுநீர்ப் பிரிப்பு (டையூரிடிக்) என கூறுவார்கள். காப்ஃபைன் என்பது டையூரிடிக்காகும். அதனால் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும் என்பது ஒன்றும் பெரிய ராக்கெட் சயின்ஸ் கிடையாது. இதன் தாக்கம் சிறிது நேரத்தில் போய் விடும் என ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் அதற்காக உங்கள் சிறுநீர்ப்பையுடன் பந்தயம் கட்ட போகிறீர்களா?

மார்பக வீக்கம்

இனப்பெருக்க வயதில் பெண்களின் மார்பகங்கள் வீக்கமடைவது இயல்பான ஒன்றே. இருப்பினும், இதன் வளர்ச்சியில் காபியும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கட்டியினால் வலியும் ஏற்படும். நீங்கள் அன்றாடம் குடிக்கும் காபியின் அளவை குறைத்தாலே இந்த கட்டிகள் மறையத் தொடங்கும்.

உடல் வறட்சி

ஏற்கனவே சொன்னதை போல் காபி என்பது டையூரிடிக்காகும். அதனால் அதிகமாக காபி குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். இப்படி அதிகமாக சிறுநீர் கழிப்பதால் டீ-ஹைட்ரேஷன் என்னும் உடல் வறட்சி ஏற்படும். நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் குறைந்து, உடலின் சமநிலையை இது பாதிக்கும். அப்படியானால் ஒரு நாளைக்கு எத்தனை கப் குடிக்கலாம்? 3-4 கப் மட்டுமே!

புரியாத பேச்சு மற்றும் சிந்தனை செயல்முறை

பரீட்சைக்கு படித்தது அனைத்தும் மனதில் நிற்பதற்கு அதிகமாக காபி குடித்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். மனதை ஒருமுனைப்படுத்த காபி உதவினாலும், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதனை அதிகமாக குடிக்கும் போது, உங்களின் சிந்தனை செயல்முறை பாதிக்கப்பட்டு நீங்கள் தடுமாறி போவீர்கள். அதற்கு காரணம் மூளையின் மீது காப்ஃபைனின் ஊக்குவிக்கும் தாக்கமே. அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது உங்கள் இசைவிணைப்பு பாதிக்கப்படும்.

அதிகரிக்கும் இரத்த கொதிப்பு

காபி குடித்த உடனேயே உங்களின் இரத்த கொதிப்பு உயர்ந்திடும். காப்ஃபைன் அதிகமான அளவில் அட்ரீனலினை சுரக்கும். இதனால் உங்கள் மெட்டபாலிசம் அதிகரித்து, உங்கள் இரத்த கொதிப்பும் உயர்ந்திடும். காபி குடித்து பழகியவர்களுக்கு அவ்வளவு வேகமாக உயர்வதில்லை. இது காபியினால் ஏற்படும் தீமையாக கருதப்படவில்லை என்றாலும் கூட பாதுகாப்பாக இருப்பது நல்லது தானே.

வயிற்றில் அல்சர்

வயிற்றில் அமிலம் சுரப்பதை காப்ஃபைன் அதிகரிக்கச் செய்யும். இது நேரடியாக அல்சரை உண்டாக்கவில்லை என்றாலும் கூட, சிறு குடலில் அதிகளவிலான அமிலம் வேகமாக செல்லும். இதனால் எரிச்சல் ஏற்பட்டு வாயிற்று வலி ஏற்படும். அதனால் உங்களுக்கு அல்சர் பிரச்சனைகள் இருந்தால் தினமும் 1-2 கப் காபியை மட்டும் குடியுங்கள்.

மாரடைப்பு ஏற்படலாம்

காபி குடிப்பது அதிகரித்தால் உங்கள் இரத்த கொதிப்பு அதிகரிக்கும். இதயகுழலிய நோய்கள் உள்ளவர்களை இது வேகமாக தாக்கும். பலவீனமான இதயம் கொண்டவர்கள் மீது ஆபத்தை விளைவிக்கும் தாக்கங்களை அது ஏற்படுத்தும். சில நேரத்தில் அது மரணத்தில் போயும் முடியும்.

பிரமை/மாயத்தோற்றம்

காபியில் காப்ஃபைன் உள்ளதால் அதனை உளவியல் மருந்து எனவும் அழைக்கின்றனர். அதனால் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் அதனால் பிரமை உணர்வு ஏற்படுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இல்லாத ஒன்றை கேட்கவும் உணரவும் செய்வீர்கள். அதிகளவிலான அட்ரீனலின் உங்களின் காரண ஆய்வு ஆற்றல்களை பாதித்து பல விதமான மாய தோற்றங்களை காண்பிக்கும்.

எலும்புத்துளை நோயை (ஆஸ்டியோபோரோசிஸ்) உண்டாக்கும்
எலும்புத்துளை நோயை (ஆஸ்டியோபோரோசிஸ்) உண்டாக்கும்
அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் கால்சியத்தை உறிஞ்சும் உங்களின் செரிமான பாதையின் ஆற்றல் பாதிக்கப்படும். நாளடைவில், அளவுக்கு அதிகமான காப்ஃபைன் உங்களின் உங்களின் எலும்பு கனிம அடர்த்தியை குறைக்கும். இதனால் எலும்புத்துளை நோய் ஏற்படும். அடிக்கடி சிறுநீர் போவதாலும் கால்சியம் குறையும். அதனால் அதன் டையூரிடிக் குணங்களும் இதற்கு காரணமாக உள்ளது. அதனால் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டும் காபி குடித்து ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா காளானை சாப்பிடுவதால் ஏற்படும் பிற நன்மைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் சக்தி வாய்ந்த உணவுகள்!!!

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! யார் யாரெல்லாம் வெந்தயத்தை முளைகட்ட வைத்து சாப்பிட வேண்டும்?

nathan

இந்த காய்கறிகளின் தோல்சீவி சமைக்காதீங்க ?ஏன் தெரியுமா?..

nathan

படிக்கத் தவறாதீர்கள்! சிறுநீரகம் ஆரோக்கியமாய் இருக்க வேண்டுமெனில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்

nathan

இம்யூனிட்டிக்கான சிறந்த உணவுகளை தெரிவு செய்து உண்பது அவசியம் நம்மை பாதுகாப்பது இன்றியமையாக ஒன்றாக உள்ளது.

nathan

சிறுநீரகப் பிரச்சனையை தீர்க்கும் வாழைத்தண்டு பச்சடி

nathan

உளுந்தங்களி பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

nathan

கோடைக் காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா?

nathan