29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
4 face 1572
முகப் பராமரிப்பு

பெண்களே 30 வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்..

முந்தைய காலத்தில் அழகாக இருப்பதற்கு ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தார்கள். அந்த பொருட்கள் இன்றும் பெரும்பாலான மக்களின் அழகு பராமரிப்புக்களில் இடம் பெற்றுள்ளன. நீங்கள் இதுவரை உங்கள் சருமத்திற்கு கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் நிறைந்த ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்தி இருந்தால், இனிமேல் அதைத் தவிர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருசில பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வாருங்கள். இந்த பொருட்கள் அழகைப் பேண மற்றும் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொருவரும் எப்போதும் மறக்கக்கூடாத பொருட்களாகும். வாருங்கள் அவை என்னவென்பதைப் பார்ப்போம்.

 

கற்றாழை ஜெல்

சருமம் மற்றும் தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கக்கூடிய ஒரு சிறப்பான பொருள் தான் கற்றாழை ஜெல். இந்த ஒரு பொருள் முகத்தில் உள்ள கருமையான தழும்புகள், சரும வறட்சி, பொலிவிழந்த சருமம் போன்ற பலவற்றை போக்கக்கூடியது. சொல்லப்போனால், கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் முதன்மையான மற்றும் முக்கியமான பொருளும் இதுவே. அப்படிப்பட்ட கற்றாழையின் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், முகம் பொலிவோடும் இளமையோடும் காட்சியளிக்கும்.

பெட்ரோலியம் ஜெல்லி

பல்வேறு சரும பிரச்சனைகளை சரிசெய்ய பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால், லிப் பாம் இல்லாத நிலையில் பலர் தங்களின் உதடு வெடிப்புகளுக்கு பயன்படுத்தும் ஒரு முதன்மையான பொருள் இதுவே. உங்கள் உதடுகள் அடிக்கடி வறண்டு போகிறதா? அப்படியானால் பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் நாள் முழுவதும் உதடுகள் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். அதேப் போல் உங்கள் கைகள் அதிக வறட்சியுடன் காணப்பட்டால், அப்போது பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முல்தானி மெட்டி

தற்போது உலகெங்கிலும் முகப்பொலிவை அதிகரிக்க ஃபேஸ் பேக்குகள் போடுவது டிரெண்ட்டாக உள்ளது. மார்கெட்டுகளில் ஏராளமான ஃபேஸ் பேக்குகள் விற்கப்படுகின்றன. இருப்பினும், எப்போதுமே பயன் தரக்கூடிய ஒரு சிறப்பான ஓர் ஃபேஸ் பேக் பொருள் என்றால் அது முல்தானி மெட்டி தான். இதில் கனிமச்சத்துக்களும், எண்ணெய்களும் அதிகமாக நிறைந்துள்ளதால், இது சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகளையும் எளிதில் வெளியேற்றி, முகத்தைப் பொலிவோடு காட்டும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டரை டோனர் போன்றும் பயன்படுத்தலாம். டோனர் என்பது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தை சுத்தம் செய்யும் பொருள். உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற நினைத்தால், தினமும் ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தைத் துடைத்தெடுக்கலாம். இதனால் அழுத்தமிக்க சருமம் சாந்தமாவதோடு, சரும எரிச்சல் குறையும் மற்றும் சருமம் பொலிவோடும் இளமையோடும் காணப்படும்.

தேங்காய் எண்ணெய்

பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் முக்கியமான மற்றும் முதன்மையான அழகு சாதனப் பொருள் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். இந்த தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு ஊட்டத்தை அளித்து, சிக்கலைப் போக்குவதோடு மட்டுமின்றி, சரும வறட்சியைப் போக்கி, சருமத்தில் ஈரப்பசையைத் தங்க வைக்கும். அதுவும் குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறட்சி அடையும். அந்த வறட்சியால் சில சமயங்களில் எரிச்சலும் ஏற்படும். ஆனால் தேங்காய் எண்ணெயை தலைக்கு மட்டுமின்றி, கை, கால்களுக்கும் தடவிக் கொண்டு, சரும வறட்சி நீங்கி, சருமமும் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா ஐஸ்கட்டியை முகத்தில் தேய்ப்பது சரியா?

nathan

கொலாஜன் ஃபேஷியல்: collagen facial

nathan

பவுடர் போட போறீங்களா

nathan

கரும்புள்ளியை விரைவில் மறையச் செய்யும் 5 தேயிலை மர எண்ணெய் குறிப்புகள் !!

nathan

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…

sangika

முக அழகை பொலிவாக வைத்து கொள்ள…..

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 10 பழக்கவழக்கங்கள் உங்களை என்றும் இளமையாக வைக்கும்…!

nathan

உங்க முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிந்து கருப்பா காட்டுதா? சூப்பர் டிப்ஸ்

nathan

எண்ணெய் பசை சருமத்தினால் நீங்கள் பெறும் 5 பயன்கள்!!! தொடர்ந்து படிக்கவும்…

nathan