31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
முகப் பராமரிப்பு

எளிமையான வழி…முகப்பருக்களை சரிசெய்ய…

கொதிக்க வைத்த நீரில் ஆவி பிடித்தாலே போதும், முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போகும். இறந்த செல்கள் நீங்கி புது செல்கள் தோன்றுவதினால், முகம் புத்துணர்வுடன் இருக்கும். இரண்டு லிட்டர் நீரினில் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாறு, 10 வேப்ப இலைகள், இட்டு நன்றாக ஆவி வருமளவு கொதிக்க வைக்க வேண்டும். அவ்வாறு கொதிக்க வைத்த நீரினை கொண்டு சற்றும் தாமதிக்காமல் ஆவி பிடிக்க வேண்டும்.

இது போல 20 நிமிடங்களுக்கு குறையாமல் ஆவி பிடிக்க வேண்டும். இதில் உள்ள வேம்பு இறந்த செல்களை நீக்க உதவுகிறது. மேலும், புதிய செல்களை தோற்றுவிக்கிறது. நாம் முகத்தில் தினமும் உபயோகிக்கின்ற க்ரீம் மற்றும் பவுடர் பூச்சுகளினால் சருமத்தில் உள்ள சுவாசிக்கும் துளைகளை அடைத்து விடுகின்றன. இதுவே முகப்பருக்கள் ஏற்பட முக்கிய காரணமாகும்.

இவ்வாறு, ஆவி பிடிக்கும் பொழுது அந்த துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சருமம் சுவாசிக்க தொடங்குவதனால் புத்துணர்வுடன் காணப்படுகின்றது. வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த ஆவிபிடித்தலை செய்யும் பொழுது சருமம் புது பொலிவுடன் இருக்கும். இந்த எலுமிச்சை முகத்திற்கு பளிச்சென்ற தோற்றத்தை கொடுக்கும்.

ஆவி பிடித்தவுடன் முகத்தை காட்டன் துணி வைத்து துடைத்து எடுத்த பின் பால் அல்லது சுத்தமான தயிர் கொண்டு முகத்தை மசாஜ் செய்யலாம், இது முகத்திற்கு புரோட்டின் சத்தினை கொடுக்கின்றது. அதிக படியான பொலிவினை பெற உதவுகிறது. குறிப்பு: ஜலதோஷம் அல்லது குளிர்ந்த உடலை கொண்டுள்ளவர்கள் இதனுடன் துளசி இல்லை அல்லது தூதுவளையை சேர்த்து கொள்ளலாம்.

Related posts

ஜொலிக்கும் சருமத்தி‌ற்கான‌ ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரும கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…என்றும் இளமையாக தெரிய வேண்டுமா….அப்ப தினமும் செய்யுங்க…

nathan

மூக்கை சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

nathan

சூப்பர் டிப்ஸ்! செக்க சிவந்த மென்மையான உதடுகளை பெற, இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்..

nathan

இயற்கை பேஷியல்கள்…

nathan

நமது முக அழகையும் இது பாதுகாக்க பெருஞ்சீரகம்!….

sangika

10 நிமிடத்தில் முகத்தில் இருக்கும் தழும்புகள், சுருக்கங்களைப் போக்கும் அற்புத மாஸ்க்!

nathan

உங்களுக்கு ஒட்டிய கன்னமா? ஒரே வாரத்தில் அழகாக மாற்ற இதோ சூப்பர் டிப்ஸ்!

nathan