11 11 honey cinnamon
ஆரோக்கிய உணவு

தெரிந்துகொள்வோமா? தேன் மற்றும் லவங்கப்பட்டையில் நிறைந்துள்ள ஆச்சரியப்பட வைக்கும் குணங்கள்!!!

தேனை பற்றியும், லவங்கப்பட்டை பற்றியும் உங்களுக்கு என்ன தெரியும்? தேன் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் இனிப்பான பொருள்; லவங்கப்பட்டை என்பது சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மசாலா பொருளாகும். இது தான் பெரும்பாலானோரிடம் இருந்து வரும் பதிலாக இருக்கும். வெகு சிலருக்கே அதையும் மீறி அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் இவை இரண்டும் சேரும் போது நீங்கள் நினைத்ததை விட இன்னும் பல உடல்நல பயன்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

 

பொதுவாக உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க தேன் பயன்படும் என தான் பலரும் நினைக்கின்றனர். இது போக சர்க்கரைக்கு பதில் அதனை ஒரு மாற்றாக பயன்படுத்தலாம் என்பதும் அவர்களின் எண்ணம். ஆனால் தேனும் லவங்கப்பட்டையும் சேரும் போது சாதாரண சளி முதல் புற்றுநோய் வரை குணமாகும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் மருத்துவ குணங்கள் நிறைந்து வழியும் இதனை பல பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். தேன் மற்றும் லவங்கப்பட்டையில் உள்ள குணப்படுத்தும் குணங்கள் பற்றிய விவரங்கள் அறிந்தவர்கள் இன்னும் இருக்கவே செய்கின்றனர்.

லவங்கப்பட்டை மற்றும் தேன் சாப்பிடும் முறை

உங்களுக்கு தேவையானது எல்லாம் லவங்கப்பட்டை, தேன் மற்றும் தண்ணீர் மட்டுமே! 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டையை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். இதன் செய்முறை மிகவும் சுலபமானது. இந்த கலவை சமமாகும் வரை லேசான வெப்பத்தில் கொதிக்க வைக்கவும். அதன் பின் அதை ஆற வைத்து, வெதுவெதுப்பாக குடிக்கவும். பதனிடப்படாத தேனையும், நற்பதமான லவங்கப்பட்டை பொடிக்கு லவங்கப்பட்டை குச்சிகளை அரைக்கவும் பரிந்துரைக்கிறோம்.

கீல்வாதம்

தினமும் காலையிலும் இரவிலும், இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு சின்ன டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி சேர்க்கப்பட்ட ஒரு கப் வெந்நீரை குடிக்கவும். இதனை தொடர்ச்சியாக குடித்து வந்தால், தீவிரமான கீல்வாதத்தை குணப்படுத்தலாம்.

சிறுநீர்ப்பை தொற்றுக்கள்

ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் இரண்டு டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி சேர்க்கப்பட்ட ஒரு கப் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இது சிறுநீர்ப்பையில் உள்ள கிருமிகளை அழித்து விடும்.

கொலஸ்ட்ரால்

இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் மூன்று டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை 1 கப் தேநீரில் கலந்து குடித்தால், இரண்டு மணிநேரத்திற்குள், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு 10 சதவீதம் குறையும்.

சளி

ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான தேனை, 1/4 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியுடன் கலந்து மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக குடித்து வந்தால் தீவிரமான இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்தி, சைனஸை நீக்கும்.

இதய நோய்கள்

தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். இதனை கோதுமையால் செய்யப்பட ரொட்டியின் மீது தடவி தினமும் காலையில் உட்கொண்டால், தமனிகளில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும். இதனால் நெஞ்சு வலி ஏற்படாமல் தடுக்கும்.

வயிற்று கோளாறு

வயிற்று வலியை குணப்படுத்தும். மேலும் வயிற்று அல்சரை அதன் வேரிலிருந்து நீக்கி விடும்.

வாய்வு

லவங்கப்பட்டை பொடியுடன் தேனை எடுத்துக் கொண்டால், வாய்வு தொல்லையில் இருந்து உங்கள் வயிறு நிவாரணம் பெறும்.

நோய் எதிர்ப்பு அமைப்பு

தேனையும் லவங்கப்பட்டை பொடியையும் தினசரி உட்கொண்டு வந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவடைந்து, பாக்டீரியா மற்றும் நச்சுயிர்களில் இருந்து உங்கள் உடல் பாதுகாக்கப்படும்.

செரிமானமின்மை

2 டீஸ்பூன் தேனில் தூவப்பட்ட லவங்கப்பட்டை பொடியை தினமும் உணவிற்கு முன் உட்கொண்டால், அசிடிட்டியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் மிக அதிகமான உணவையும் கூட செரிக்க வைக்கும்.

இன்ஃபுளுவென்சா – ஃப்ளூ

இன்ஃபுளுவென்சா கிருமிகளை கொல்லும் இயற்கையான பொருட்கள் தேனில் உள்ளது. இது நோயாளிகளை ஃப்ளூ தாக்காமல் பாதுகாக்கும்.

முதுமை பிரச்சனைகள்

4 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை போடி மற்றும் 3 கப் தண்ணீரை ஒன்றாக கலந்து, அதனை கொதிக்க வைத்து, தேநீர் போல் தயார் செய்து கொள்ளவும். இதனை தினமும் பருகி வந்தால் வயதான காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.

பருக்கள்

3 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை தூங்க செல்வதற்கு முன் பருக்களின் மீது தடவவும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால் வேரிலிருந்தே பருக்கள் நீங்கும்.

உடல் எடை குறைப்பு

ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்த தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை தினமும் காலை உணவை சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் வெறும் வயிற்றிலும், இரவு தூங்க செலவற்கு முன்பும் குடித்து வந்தால், உடலில் கொழுப்பு குவியாமல் தடுக்கப்படும்.

சரும தொற்றுக்கள்

பாதிக்கப்பட்ட இடங்களில் தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியைத் தடவி வந்தால் சிரங்கு, படர்தாமரை மற்றும் அனைத்து விதமான சரும தொற்றுக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

சோர்வு

தேனில் உள்ள சர்க்கரை உடல் வலுவடைவதற்கு இடைஞ்சலாக இல்லாமல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரை டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீருடன் கலந்து, அதன் மீது கொஞ்சம் லவங்கப்பட்டை பொடியை தூவி, காலையில் பல் துலக்கிய பின்னும், மதியமும் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் உடலின் உற்சாகம் அதிகரிக்கும்.

புற்றுநோய்

1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை ஒரு மாத காலத்திற்கு, தினமும் 3 வேளை எடுத்துக் கொண்டால், வயிறு மற்றும் எலும்பில் முற்றிய புற்றுநோய் சரியாகும்.

காது கேளாமை

தினமும் காலையிலும் இரவிலும் தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சரிசமமான அளவில் எடுத்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் காது கேட்க உதவிடும்.

 

Related posts

உங்களுக்கு இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சா, இனிமேல் நீங்க வெள்ளை சர்க்கரை யூஸ் பண்ணவே மாட்டீங்க!

nathan

தலைச் சுற்றலுக்கு எளிய மருந்தான நெல்லிக்காயை பயன்படுத்துங்கள்

nathan

கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி

nathan

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை!

nathan

பெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்த டிப்ஸ்

nathan

தினமும் காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு எலுமிச்சம் பழத்தின் முழுமையான மருத்துவப் பயன்கள் தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

ஆப்பிளை விட கொய்யாவை அதிகம் சாப்பிட வேண்டும்!!

nathan

சத்தான சுவையான ஓட்ஸ் ஆலு சப்பாத்தி

nathan