30.7 C
Chennai
Thursday, Sep 18, 2025
17 oats dosa
​பொதுவானவை

சுவையான ஓட்ஸ் ரவா தோசை

நிறைய பேருக்கு ஓட்ஸ் கொண்டு என்ன செய்வதென்றே தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தாலும், அது வெறும் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து செய்வது பற்றி மட்டும் தான். ஆனால் ஓட்ஸைக் கொண்டு தோசை சுடலாம் என்பது தெரியுமா? அதுவும் இந்த ஓட்ஸ் தோசை பார்ப்பதற்கு சாதாரண தோசைப் போன்றே இருக்கும்.

மேலும் இந்த ஓட்ஸ் ரவா தோசையானது காலையில் செய்வதற்கு ஏற்றது. இங்கு ஓட்ஸ் ரவா தோசையை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பொடி செய்த ஓட்ஸ் – 100 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
ரவை – 50 கிராம்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் ஓட்ஸ், அரிசி மாவு, ரவை மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும.

பின்னர் அதில் சீரகம், மிளகுத் தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அத்துடன் தண்ணீர் ஊற்றி நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக சுட்டு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ஓட்ஸ் ரவா தோசை ரெடி!!! இதனை வெங்காய சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Related posts

கணவன் – மனைவி ஆனந்தமாய் வாழ வேண்டுமா?

nathan

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?

nathan

செல்போனை ஜாக்கிரதையாகப் பயன்படுத்த சில யோசனைகள்! ~ பெட்டகம்

nathan

இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு

nathan

கண்டதிப்பிலி ரசம்

nathan

நீர் தோசை

nathan

கிரீன் சில்லி சாஸ்,சமையல் குறிப்புகள்..,

nathan

சுவையான வாழைக்காய் மிளகு வறுவல்

nathan

வெங்காய ரசம்

nathan