மிகச் சிறிய வயதிலேயே குழந்தைகளுக்கு இதய நோய்களால் பாதிக்கப்படுவதுண்டு. ஏன் இந்த பருவத்திலேயே நோய்கள் இதய நோய்கள் வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஏன் இதய நோய்கள் வருகிறது?
உலகளவில் 100 ல் ஒரு குழந்தைக்கு இதய நோய் உள்ளது. இதற்கான காரணம் எதுவென ஆராய்ச்சி செய்ததில், ஆக்ஸிஜன் குறைபாடே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
கரு வளர்ச்சியின்போது ஆக்ஸிஜன் போதிய அளவு கிடைக்காததால், செல் உளைச்சலுக்கு ஆளாகிறது. இந்த அழுத்ததை தவிர்க்க புரொட்டின் உற்பத்தியை தடுக்கிறது.
புரொட்டின் சரியான அளவு கிடைக்காவிட்டால் கரு சரியாக வளர்ச்சியடையாது. கருவில் முதலில் இதயம் தோன்றுவதால் அதன் வளர்ச்சியில் குறைகள் ஏற்படுகிறது. விளைவு இதய நோய். பிறப்பில் உண்டாகும் குறைபாடே இதய நோய்களுக்கு காரணம்.
ஆக்ஸிஜன் குறைப்பாட்டிற்கு காரணம் என்ன?
கருமுட்டைக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காததற்கு காரணம், தாய்க்கு உயர் ரத்த அழுத்தம், நிறைய மருந்துகள் உட்கொள்வது என நிறைய காரணங்களை சொல்லலாம் என்று ஜர்னல் டெவலப்மென்ட் என்ற மருத்துவ இதழ் கூறியுள்ளது.
ஆக்சிஜன் குறைப்பாடு தவிர்த்து, அதிகப்படியான வெப்ப நிலை, ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, மிகக் குறைவான ஊட்டச்சத்து, நச்சுக்கள் உடலில் உண்டாவது ஆகியவை செல் வளர்ச்சிகளை பாதிக்கலாம். இவற்றால் இதயம் மட்டுமல்லாது சிறு நீரக பாதிப்பும் உண்டாகிறது என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆய்விற்காக, எலியின் கருமுட்டையில் ஆக்ஸிஜன் அளவை குறைத்தனர். 21 சதவீதத்திலிருந்து வெறும் 5.5. சதவீதத்திற்கு ஆக்ஸிஜன் அளவை குறைத்தனர். 8 மணி நேரத்திற்கு பின், கருவில் உருவான இதயம் பாதிப்படைந்தது தெரிய வந்தது. மனிதர்களுக்கும் இது போன்றே பல்வேறு இதய நோய்களுக்கு காரணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.