mango beauty regime
சரும பராமரிப்பு

பெண்களே கோடையில் அழகைப் பாதுகாக்க மாம்பழத்தை யூஸ் பண்ணுங்க…

கோடைக்காலத்தில் தான் அழகைக் கெடுக்கும் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்போம். அதில் முகப்பரு, சருமம் கருமையாதல், சரும சுருக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளைப் போக்க கோடைக்கால பழமாக மாம்பழம் பெரிதும் உதவி புரியும்.

 

ஏனெனில் மாம்பழத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஈ அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆகவே மாம்பழத்தை சாப்பிடுவதோடு, அதனைக் கொண்டு அழகைப் பராமரிக்கவும் முயற்சி செய்யுங்கள்.

 

இங்கு கோடையிலும் நன்கு அழகாக ஜொலிக்க மாம்பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.

சரும சுருக்கத்தைத் தடுக்க…

மாம்பழத்தை வெட்டி சாப்பிட்ட பின்னர், அதன் தோலைக் கொண்டு முகத்தில் தடவி 10-15 நிமிடம் உலர வைத்து, பின் அதனை குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால், சருமம் மென்மையாக, சுருக்கமின்றி இருக்கும்.

கருமையைப் போக்க…

மாம்பழத்தை அரைத்து, அதில் சிறிது மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, கை மற்றும் கால்களுக்கு தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கும்.

பொலிவான சருமத்திற்கு…

மாம்பழத்தின் தோலை வெயிலில் உலர வைத்து, பின் பொடி செய்து, அதில் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த மாதிரி வாரம் மூன்று முறை செய்து வர, சருமம் பொலிவோடு திகழும்.

பருக்களைப் போக்க…

ஒரு துண்டு மாங்காயை நீரில் போட்டு வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தால், மாங்காயில் உள்ள பொருளானது, அழுக்குகள் மற்றும் எண்ணெய்களால் சருமத்துளைகளில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து, கோடையில் பருக்கள் வருவதைத் தடுக்கும்.

புத்துணர்ச்சியான சருமத்திற்கு…

1 டீஸ்பூன் மாம்பழத் தோலின் பொடியுடன், சிறிது மாம்பழ கூழ் சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, சருமம் சோர்வின்றி புத்துணர்ச்சியோடு காணப்படும்.

கூந்தல் வளர்ச்சிக்கு…

கோடையில் அதிகப்படியான வியர்வையினால், முடி அதிகம் உதிர ஆரம்பிக்கும். அதனைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்க, நன்கு கனிந்த மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு அரைத்து, அதில் 2 முட்டையின் மஞ்சள் கரு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படு நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு முடியை அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

Related posts

அழகுக்கு ஆப்பிள் பழம்

nathan

பெண்களே உங்க கை வயசானவங்க கை மாதிரி இருக்கா? இத ட்ரை பண்ணுங்க…

nathan

இந்த 5 பழங்களும் உங்கள் அழகை அதிகப்படுத்தும்!! எவையென்று தெரிஞ்சுக்கனுமா?

nathan

குளிர்காலம்: சருமத்தை வறட்சியை தடுக்கும் வழிகள்

nathan

அழகிற்காக டால்கம் பவுடரை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?

nathan

ஆட்டின் பால் சோப்பு பயன்கள் – goat milk soap benefits in tamil

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா? அதற்கான ஸ்பெஷல் பராமரிப்புகள்!

nathan

சருமம் பளபளக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தும் 10 வழிகள்!!சூப்பர் டிப்ஸ்

nathan

பனிக்காலத்தில் சரும வறட்சியை போக்கும் வீட்டு வைத்தியம்

nathan