31.1 C
Chennai
Saturday, May 17, 2025
12243575 461003307419009 2933342511980710390 n
கால்கள் பராமரிப்பு

பாதங்களைப் பாதுகாக்க!

* பப்பாளிப் பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதைப் பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும். * தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, அது தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர, பித்த வெடிப்பு சரியாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினாலும் பித்த வெடிப்புகள் சரியாகும்.

* இரவு நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கச் செல்வது நல்லது. இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* தினமும் குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
12243575 461003307419009 2933342511980710390 n

Related posts

வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

nathan

குதிகால் வெடிப்பு பிரச்சனைக்கு ஓர் எளிய இயற்கை மருத்துவம்!…

sangika

விரைவில் பாத வெடிப்பை மறையச் செய்யும் தேன் க்ரீம் !! எப்படி செய்வது என தெரியுமா?

nathan

இந்த ஒரே ஒரு டிப்ஸ் உங்கள் பாதத்தை பட்டு போல் ஆக்கும்! எப்படின்னு பாருங்க.

nathan

பித்த வெடிப்பா கவலையை விடுங்கள்..!

nathan

உங்க கால் பாதங்களை கொஞ்சம் கவனியுங்கள்!

nathan

டீடாக்ஸிங் எனப்படும் நச்சு நீக்க சிகிச்சைகள் பாதங்களின் வழியே..

nathan

கால்களையும் கொஞ்சம் கவனியுங்கள்! Tips to Care your feet

nathan

கால்களை பராமரிப்பது எப்படி? –அழகு குறிப்புகள்.,

nathan