27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
pic
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! மாதவிடாய் நாள் வலியை குறைக்கும் ஆயுர்வேத தேநீர்!

மாதவிடாய் திடீரென சுறுசுறுப்பாகச் சுற்றி வரும் ஒரு பெண்ணை முடக்கிவிடும். அந்த நேரத்தில் ஏற்படும் பல்வேறு துயரங்கள் பெண்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடையச் செய்யலாம்.

மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உபாதைகள் ஒரே மாதிரியாக இருக்காது. இது நபரைப் பொறுத்தது.

எல்லோரும் வயிற்று வலியை அனுபவிப்பது பொதுவானது.இந்த சமயங்களில் கண்ட உணவுகளை சாப்பிடமால் ஒரு சில இயற்கை ஆயுர்வேத பானங்களை குடித்தால் நல்லது.

இப்போது மாதவிடாய் வலியை குறைக்கும் ஒரு சிறந்த ஆயுர்வேத பானம் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

தண்ணீர் – 4 கப்
ஃப்ரெஷ்ஷாக இருக்கும் இஞ்சி – 2 அங்குலம் அளவு
துளசி இலைகள் – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
புதினா இலை- அரை கைப்பிடி
இலவங்கப்பட்டை – சிறு துண்டு

செய்முறை

இஞ்சியை தோல் சீவி உரிக்கவும் பின்னர் நறுக்கி அரைத்து சாற்றை பிழியவும். துளசி இலையை சுத்தம் செய்து மசித்து விடவும். பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்த உடன் வெப்பத்தை குறைவாக வைக்கவும்.

அரைத்த இஞ்சி, துளசி, எலுமிச்சை சாறு, புதினா இலை சாறு மற்றும் இலவங்கப்பட்டை குச்சிகளை சேர்க்கவும். பின்னர் 10 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் வைக்கவும். பிறகு இதை இறக்கி இவை வெதுவெதுப்பாக குறைந்ததும் இனிப்புக்கு தேவையெனில் தேன் சேர்த்து கலக்கவும்.

தொடர்ச்சியான பிடிப்பு நிவாரணத்துக்கு தொடர்ந்து இந்த தேநீர் ஒரு நாளைக்கு 3 முறை குடிக்கவும். உங்கள் மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பு தினமும் இதை குடித்து வரலாம்.

மாதவிடாய் சுழற்சியின் போதும் நீங்கள் குடிக்கலாம். சிலருக்கு மாதவிடாய் நாட்களில் தசைபிடிப்பு தாண்டி உடலில் செரிமானப்பிரச்சனைகள் சரி ஆகும்.

சிலருக்கு இந்த நாட்களில் குமட்டலை உணர்கிறார்கள். இந்த தேநீர் அவர்களுக்கு நிவாரணத்தையும் அளிக்கலாம். மாதவிடாய் பிடிப்பை முற்றிலுமாக தவிர்க்க முடியாது, ஆனால் இந்த ஆயுர்வேத தேநீர் தீவிரமாகாமல் தடுக்க உதவுகிறது.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த 6 மூலிகைகளை வீட்டில் வளர்த்தால் ஒரு நோயும் உங்களை நெருங்காது!

nathan

பெண்களே புதிய செல்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

nathan

உங்களுக்கு தெரியுமா இளமையை காக்கும் துளசி…இன்னும் பல நோய்களை தீர்க்கும்!

nathan

உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றும், கவனமாக இருங்கள்!

nathan

தூக்கம் ஏன் அவசியம்?

nathan

மன அழுத்தம் உடலின் பல பாகங்களை பாதிக்கும்

nathan

கழுத்து வலியால் அவஸ்தையா? அப்ப இந்த பயிற்சி செய்யுங்க

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை எப்படி சரிசெய்வது?

nathan

முதலிரவை பாலுடன் தொடங்க காரணம் தெரியுமா?

nathan