29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
மருத்துவ குறிப்பு

முதலிரவை பாலுடன் தொடங்க காரணம் தெரியுமா?

நமது நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை சடங்கு, சம்பிரதாயம் என பலவன இருக்கின்றன. இதில் ஒன்று தாம் சாந்தி முகூர்த்தம் என கூறப்படும் முதலிரவு. திருமணம் முடிந்த முதல் நாள் அல்லது, ஓர் நல்ல நாள் பார்த்து தம்பதிகள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை துவக்க இந்த சடங்கு பின்பற்றப்படுகிறது.

பால் உடலை சுத்தப்படுத்த உதவும் ஓர் கருவியாக கருதப்பட்டு வருகிறது. இல்லற வாழ்க்கையை தொடங்கும் இடமாக விளங்கும் முதலிரவன்று பால் அருந்தி தொடங்குவதால், அந்த வாழ்க்கை தூய்மையாக துவங்குகிறது என்று கருதி வந்துள்ளனர். உடல் அசதியாக இருக்கும் தம்பதிகளின் உடலை புத்துணர்ச்சி அடைய உதவும் பானம் பால்.

இது உடலில் உள்ள சோர்வை போக்கி சுறுசுறுப்பை தரும். மற்றும் பாலில் இருக்கும் டிரிப்டோபென் (Trytophan) எனப்படும் அமினோ அமிலம் உடலை இலகுவாக உணர உதவுமாம். இதற்காகவும் கூட பால் அருந்தி வருவது முதலிரவு வழக்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம். குங்குமப்பூ, மஞ்சள் போன்றவை கலந்து பாலை பருகுவது பாலுணர்வை தூண்ட உதவுகிறது.

இதனால், தாம்பத்தியம் சிறக்கும் என்பதாலும் முதலிரவில் பால் பருகுவது வழக்கமாக பின்பற்றுப்பட்டுள்ளது. மேலும் அக்காலத்தில் பாலில் அஸ்வகந்தா கலந்து குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது. அபூர்வ இந்திய மூலிகைகளில் ஒன்றான அஸ்வகந்தா உடலுறவு வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது ஆகும்.

Related posts

ஹைப்போதைராடிஸத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடல் பருமனுடன் கருத்தரித்தால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!

nathan

இந்த பானங்களை குடிப்பதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

ஆய்வில் அதிர்ச்சி! சிசு வளர்ச்சியை பாதிக்கும் பாரசிட்டமால் …

nathan

ஃபேஸ்புக்கை டீ ஆக்டிவேட் செய்தாலும் மெஸெஞ்சரில் சாட் செய்யலாம் எப்படி?

nathan

உயர் ரத்த அழுத்த நோய் தீர ஆயுர்வேத மருத்துவம்

nathan

உங்களுக்கு முப்பது வயசு ஆகபோகுதா? அப்ப இதெல்லா நீங்க கண்டிப்பா மாத்திக்கணும்!!!

nathan

சோம்பேறியாக இருக்கும் குழந்தையை சமாளிக்க வழிகள்

nathan

இதோ படர்தாமரை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் சில சூப்பர் டிப்ஸ் !

nathan