24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
kontrol
ஆரோக்கியம் குறிப்புகள்

சமைத்த உணவுகளின் சுவையை சரிப்படுத்துவது எப்படி?

குழம்பு ரசம் செய்யும்போது உப்பு, காரம் கூடிவிடும் அல்லது குறைந்துவிடும். குறைந்தால் அதை சேர்ப்பதன் மூலம் சரி செய்யலாம். ஆனால் கூடுதலாக இருந்தால் வயிற்றுக்குள் செல்வதற்கு பதில் நேராக குப்பைத்தொட்டிக்கு போய்விடுமே…. அதை எப்படி சரி செய்யலாம் என்று ஒரு சில ஐடியாஸ்.

உப்பு:

காரத்தையும் புளிப்பையும் அதிகரித்தால் உப்பு சுவை குறையும். அதனால் குழம்பில் உப்பு கூடினால் இன்னும் கொஞ்சம் புளியைக்கரைத்து கொதிக்க விடலாம்.

அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கலாம்.

அல்லது தக்காளியை (கொஞ்சம் பழுத்தது கிடைத்தால் நல்லது) பொடியாக நறுக்கி தனியாக வதக்கிச் சேர்த்து கொதிக்க விடலாம்.

சில வகை குழம்புகளுக்கு பச்சை மிளகாய்களை பாதியாக பிளந்து (slit the chillies) அல்லது சிவப்பு மிளகாய்கள் என்றால் ரெண்டாக கட் செய்து தாளிப்பில் சேர்த்தாலும் உப்பு குறையும்.

மோர்க்குழம்பு போன்றவை செய்யும் போது உப்பு கூடினால் கவலையே வேண்டாம், இன்னும் ஒரு கப் தயிர் சேர்த்துவிடலாம். தயிர் இல்லை என்றாலும் கொஞ்சம் புளியைக் கரைத்து கொதிக்க விட்டு சேர்க்கலாம்.

பருப்பு குழம்பு/சாம்பார் என்றால் முள்ளங்கியை தோல் சீவி வில்லை வில்லையாக நறுக்கி சேர்த்து கொதிக்க விடலாம். இது சில வகை குழம்புக்குதான் ருசிக்கும்.

ஒரு உருண்டை சாதத்தை உருட்டி குழம்பில் போட்டு வைத்தால் உப்பு சரியாகும்.
kontrol

Related posts

உங்கள் குழந்தைக்கு வாய் புண்களில் இருந்து விடுபட எளிய வழி!

nathan

தெரிஞ்சிக்கங்க…அதிக நேரம் போன் பேசுவீர்களா?.. அப்போ உங்களுக்கு தான் இந்த அதிர்ச்சி தகவல்..

nathan

இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப மோசமான சூழ்ச்சிக்காரங்களாம்… தெரிஞ்சிக்கங்க…

nathan

குதிகால் வலியை போக்கும் பயிற்சி

nathan

இந்த 5 ராசிக்காரங்க எல்லாரையும் நம்பி ஈஸியா ஏமாந்துபோகும் முட்டாளாக இருப்பார்களாம்…

nathan

பிறப்புறுப்பில் தொற்று மற்றும் வீட்டு மருத்துவம்

nathan

இவைகளை நீக்கினால் ஆரோக்கியம் கூடும்

nathan

ஆண்களின் ஆரோக்கியத்தை குறி வைக்கும் 7 அபாயங்கள்!….

sangika

வேர்கடலை கொழுப்பு அல்ல. ஒரு மூலிகை!

nathan