61
சட்னி வகைகள்

குடமிளகாய் சட்னி

தேவையானவை: குடமிளகாய் பெரியது – ஒன்று, சின்ன வெங்காயம் – 100 கிராம், பச்சை மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப), தக்காளி சிறியது – ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு – தாளிக்க தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு சிறிய குழிக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குடமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான கடாயை வைத்து நல்லெண்ªணய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு, அதன்பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் குடமிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் தக்காளி சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி, பின்னர் புளிக் கரைசலை சேர்த்து. எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.

இதை உப்புமா, பொங்கல், தயிர் சாதம், வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.
6

Related posts

சத்தான சௌ சௌ சட்னி

nathan

சப்பாத்திக்கு சுவையான தக்காளி தால்

nathan

சுவையான செலரி சட்னி

nathan

கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி

nathan

கொள்ளு சட்னி

nathan

பச்சை மிளகாய் வெங்காய சட்னி

nathan

சுவையான தக்காளி சட்னி

nathan

உருளைக்கிழங்கு சட்னி

nathan

இஞ்சி தேங்காய் சட்னி

nathan