32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
சட்னி வகைகள்

காலிஃபிளவர் சட்னி

தேவையான பொருட்கள் :

காலிஃபிளவர் – ½ கிலோ

சோம்பு – 1 டீஸ்பூன்

தேங்காய் – ½ முடி (சிறியது)

ஏலக்காய் – 1

இஞ்சி – 1 சிறிய துண்டு

மிளகாய் வற்றல் – 6

பூண்டு – 5 பல்

எண்ணெய் – 1 குழிக்கரண்டி

கிராம்பு – 1

கசகசா – 1 மேஜைக்கரண்டி

பட்டை – 1

சின்னவெங்காயம் – 20

தக்காளி – 1

முந்திரிப்பருப்பு – 10

குடைமிளகாய் – 1 (சிறியது)

உப்பு – தேவையானது

செய்முறை :

* காலிஃபிளவர், குடைமிளகாய் ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சி, பூண்டு, ஏலம், சோம்பு, கிராம்பு, பட்டை, மிளகாய் வற்றல், கசகசா, தேங்காய் எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கிய பின் குடைமிளகாய், காலிஃபிளவரை வதக்கி அரைத்த மசாலை ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்து வெந்தபின் இறக்கவும்.

* சுவையான காலிஃபிளவர் சட்னி தயார்.

* சப்பாத்தி இட்லிக்குத் தொட்டு சாப்பிடலாம். தேங்காயை பால் எடுத்தும் ஊற்றலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா உடல் வெப்பத்தை தணிக்கும் மாங்காய் புதினா சட்னி

nathan

வறுத்து அரைத்த தேங்காய் சட்னி

nathan

தக்காளி குருமா

nathan

பச்சை மிளகாய் பச்சடி

nathan

சப்பாத்திக்கு சுவையான தக்காளி தால்

nathan

சூப்பரான கோங்குரா சட்னி

nathan

கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி

nathan

சுவையான கத்திரிக்காய் சட்னி

nathan

வெங்காய கொத்தமல்லி சட்னி

nathan