சட்னி வகைகள்

நெல்லிக்காய் சட்னி

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் – 3
துருவிய தேங்காய் – 1 கப்
சிவப்பு மிளகாய் – 3
இஞ்சி – சிறிய துண்டு
உளுந்து – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – 1 தேக்கரண்டி

தாளிக்க :

எள் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுந்து – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை

* நெல்லிக்காய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி உளுந்து, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்.

* அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, நெல்லிக்காய் போட்டு நன்றாக வதக்கிய பின் துருவிய தேங்காயை போட்டு வதக்கவும்.

* வறுத்தவற்றை ஆறவைத்து மிக்சியில் போட்டு அதனுடம் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில்ல வைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அரைத்த நெல்லிக்காய் சட்னியில் போட்டு பரிமாறவும்.

* சுவையான சத்தான நெல்லிக்காய் சட்னி ரெடி.

Related posts

வாழைத்தண்டு சட்னி

nathan

சுவையான தக்காளி கடலைப்பருப்பு துவையல்

nathan

தக்காளி – பூண்டு சட்னி

nathan

வயிற்று உபாதைகளுக்கு ஏற்ற பூண்டு சட்னி -சூப்பர் டிப்ஸ்

nathan

காரசாரமான பச்சை மிளகாய் சட்னி

nathan

சுவையான கடலைப்பருப்பு சட்னி

nathan

கடலைப்பருப்பு சட்னி (KADALAI PARUPPU CHUTNEY)

nathan

சூப்பரான செட்டிநாடு மிளகாய் சட்னி

nathan

கேரட் சட்னி

nathan