26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
red Cabbage benefits SECVPF
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…அல்சரைப் போக்கும் சிவப்பு முட்டைக்கோஸ் பொரியல்

வழக்கமான முட்டைக்கோசு விட சிவப்பு முட்டைக்கோசு மீது அதிக சிறப்பம்சங்கள் உள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிவப்பு முட்டைக்கோசில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும். குறிப்பாக சிவப்பு மற்றும் ஊதா முட்டைக்கோஸ் அல்சருக்கு மிகவும் நல்லது.

எனவே அல்சரால் பாதிக்கப்பட்டுள்ளோர், சிவப்பு நிற முட்டைக்கோஸை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், அல்சரைப் போக்கலாம். இங்கு அந்த சிவப்பு நிற முட்டைக்கோஸ் பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

பன்னீர் செட்டிநாடுபன்னீர் செட்டிநாடு

தேவையான பொருட்கள்:

ஊதா/சிவப்பு நிற முட்டைக்கோஸ் – 2 கப் (நறுக்கியது)
வெங்காயம் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
துருவிய தேங்காய் – சிறிது (விருப்பமிருந்தால்)
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

இட்லி மாவு போண்டா இட்லி மாவு போண்டா

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

பின்பு நறுக்கி வைத்துள்ள முட்டைக்கோஸை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி, பின் ஒரு கையளவு தண்ணீர் தெளித்து, மூடி வைத்து, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

காரைக்குடி சிக்கன் வறுவல்காரைக்குடி சிக்கன் வறுவல்

பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டினால், பொரியலானது நீல நிறத்தில் மாறும். பின் அதில் கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், ஊதா/சிவப்பு நிற முட்டைக்கோஸ் பொரியல் ரெடி!!!

Related posts

உங்க வீட்டில் இந்த உணவுகள் மிச்சமாயிடுச்சா? கண்டிப்பாக சாப்பிடாதீங்க, விளைவு பயங்கரமா இருக்கும்.

nathan

உங்களுக்கு தெரியுமா தேங்காய் எண்ணெயில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்வோமா!.

nathan

காம உணர்வை அதிகரிக்க செய்யும் முருங்கை

nathan

பெருஞ்சீரகம்! வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! யார் யாரெல்லாம் வெந்தயத்தை முளைகட்ட வைத்து சாப்பிட வேண்டும்?

nathan

கல்லீரலுக்கு பலம் தரும் அரைக்கீரை

nathan

இதயத்தை பலப்படுத்தும் சுக்கான் கீரை

nathan

சுவையான சத்தான ராகி கருப்பட்டி பணியாரம்

nathan

அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் அபாயம்

nathan