31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

இதோ எளிய நிவாரணம்! தோள்பட்டை, கழுத்து வலியை போக்கும் பயிற்சிகள்

கம்ப்யூட்டரில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு நாளடைவில் கழுத்து தசை பாதிக்கப்படும். அந்த இடத்தில் போதிய ரத்த ஓட்டம் இருக்காது.இதனால் கழுத்து மற்றும் கை, கால் பகுதிகளில் வலி ஏற்பட்டு கழுத்து பகுதியை அசைக்க கூட முடியாமல் போகலாம். கழுத்து பகுதிக்கு வலு சேர்க்கும் எளிய பயிற்சிகள் உள்ளன. இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலி பிரச்சனையே இருக்காது.அப் அண்ட் டவுன் :தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும் கீழும் அசைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 20 நொடிகள் செய்ய வேண்டும்.

நெக் சைட் :

தரையில் நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறம் திருப்பி, பின் நோக்கி நேராக்கி அதன் பின் இடது புறம் திருப்ப வேண்டும். இப்படி 20 நொடிகள் செய்ய வேண்டும்.

நெக் ஸ்ட்ரெச்சிங் :

கைகளை மோவாயில் வைத்தபடி கழுத்தை பின்னால் சாய்க்கவும். 20 நொடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.

நெக் ஃபார்வர்ட் பென்ட் :

கைகளை பின்னந்தலையில் வைத்தபடி கழுத்தை முன்பக்கமாக குனியவும். இந்த நிலையில் 20 விநாடிகள் இருக்கவும். மேலே சொன்ன இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் விரையில் நல்ல பலனை காணலாம்.

பலன்கள் :

தோள்பட்டை தசைகள் வார்ம் அப் ஆகும். கழுத்து தசைகள் நன்றாக ஸ்ட்ரெச் ஆகும். இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரிக்கும்.

Related posts

பாதப்பராமரிப்புக்கான மருத்துவமுறைகள்

nathan

விரதம் இருந்தால் இளமையாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழலாம் – ஆய்வில் தகவல்!!!

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அஸ்வகந்தா தேநீர்

nathan

கை கால் எரிவுக்கான -சித்த மருந்துகள்

nathan

பெண்கள் கார் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…35 வது வாரத்தில் குழந்தை பிறந்தால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து !!!

nathan

ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ குணங்கள்

nathan

காலையில் எழுந்ததும் திடீரென்று தலைவலி அல்லது தலைச்சுற்றல் ஏற்படுகிறதா? அப்போ கட்டாயம் இத படிங்க!

sangika