vitamincfoods
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…அதிக அளவில் வைட்டமின் சி அடங்கிய உணவுகள் எவை தெரியுமா?

வைட்டமின் சி நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இந்த வைட்டமின் நீரில் கரையக் கூடியது. மேலும் இவை ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. நமது உடலில் உள்ள திசுக்களுக்கு இவை மிகவும் முக்கியமானது. இதய நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், மகப்பேறு காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், கண் நோய்கள், சரும சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க வைட்டமின் சி பயன்படுகிறது.

 

நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்தை நீங்கள் உணவின் மூலம் மட்டுமே பெற முடியும். எனவே போதுமான வைட்டமின் சி கிடைக்காத பட்சத்தில் வைட்டமின் சி பற்றாக்குறை ஏற்படுகிறது. வைட்டமின் சி பற்றாக்குறையால் ஏற்படும் நோய் தான் ஸ்கர்வி. இதனால் நாம் சோர்வாக, ஒரு மந்தமான நிலையில் இருப்போம். இது நமது உடலின் எலும்பு மற்றும் தசைகளின் வலிமையை பாதித்து ஒட்டு மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடுகிறது.

இந்த வைட்டமின் சி பற்றாக்குறையால் அதிக இரத்த அழுத்தம், பித்தப்பை பிரச்சினைகள், பக்கவாதம், சில வகை புற்றுநோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினைகளும் நம் உடலில் ஏற்படுகின்றன. இக்கட்டுரையில் வைட்டமின் சி பற்றாக்குறையைத் தடுத்து, அதிகளவு வைட்டமின் சி அடங்கிய 15 உணவுகளைப் பற்றி பார்ப்போம்.

கொய்யா

கொய்யாப்பழம் வைட்டமின் சி அதிக அளவு அடங்கிய ஒரு பழமாகும். ஒரு கொய்யாப் பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி அளவான 628% உள்ளது. எனவே தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் உங்கள் வைட்டமின் சி பற்றாக்குறையை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

மஞ்சள் குடைமிளகாய்

இந்த வகை குடைமிளாகாயிலும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. ஒரு பெரிய மஞ்சள் குடைமிளகாயில் 341 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. எனவே இனி இது உணவை அழகுபடுத்துவதோடு மட்டுமில்லாமல் நமது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

பார்சிலி

பார்சிலி மூலிகையில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. ஒரு கப் பார்சிலியில் 133 % அளவு வைட்டமின் சி உள்ளது. எனவே இனி உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பார்சிலியையும் உங்கள் உணவில் தவறாமல் சேர்த்து கொள்ளுங்கள்.

சிவப்பு குடைமிளகாய்

இதிலும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. 1 கப் சிவப்பு குடைமிளகாயில் 317 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் இதிலுள்ள இதர ஊட்டச்சத்துக்களும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க பயன்படுகின்றன.

கிவி

கிவி பழத்தில் எதிர்பாராத அளவு வைட்டமின் சி அடங்கியுள்ளது. 1 துண்டு கிவி பழத்தில் 273 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. சாப்பிடுவதற்கு தித்திக்கும் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் கூடிய இப்பழத்தில் வைட்டமின் ஏ, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் போன்றவைகளும் அடங்கியுள்ளன.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி உடலுக்கு தேவையான காய்கறியாகும். 1 கப் ப்ராக்கோலியில் 135 % வைட்டமின் சி அடங்கியுள்ளது. எனவே உங்கள் உணவில் இதை சேர்த்து பயனடையுங்கள்.

லிச்சி

லிச்சி ஒரு சுவையான பழம் மட்டும் கிடையாது. ஆரோக்கியமான பழமும் கூட. இதில் ஏராளமான வைட்டமின் சி அடங்கியுள்ளது. 100 கிராம் வைட்டமின் சியில் 71.5 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் பொட்டாசியம் மற்றும் நல்ல கொழுப்பு போன்றவைகளும் உள்ளன.

பப்பாளி

பப்பாளியிலும் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. 1 கப் பப்பாளியில் 144 % அளவிலான ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. இதில் வைட்டமின் ஏ, போலேட், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளும் உள்ளன.

ஸ்ட்ராபெர்ரி

1 கப் ஸ்ட்ராபெர்ரியில் 149% வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் இதில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன. இதை நீங்கள் சாலட், ஸ்மூத்தி மற்றும் டெசர்ட் போன்ற உணவுகளில் சேர்த்து கொள்ளலாம்.

ஆரஞ்சு

1 ஆரஞ்சு பழத்தில் 163 % வைட்டமின் சி அடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தை நீங்கள் ஜூஸாக அல்லது சாலட் போன்றவற்றின் மூலம் சாப்பிடலாம்.

எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி

லெமன் மற்றும் சாத்துக்குடி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி அடங்கியுள்ளது. 100 கிராம் லெமனில் 53 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. 100 கிராம் சாத்துக்குடி பழத்தில் 29.1 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. இவைகள் கலோரி குறைந்த கொழுப்பில்லாத பழங்கள். எனவே உடலுக்கு ஆரோக்கியமான ஒன்றாகும்.

அன்னாசி பழம்

1 கப் அன்னாசி பழத்தில் 131 % வைட்டமின் சி அடங்கியுள்ளது. இந்த அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன.

காலிஃப்ளவர்

காலிஃப்ளவர் வைட்டமின் சி அடங்கிய காய்கறியாகும். 1 கப் காலிஃப்ளவரில் 77% வைட்டமின் சி அடங்கியுள்ளது. இதில் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

நெல்லிக்காய்

சாப்பிடுவதற்கு புளிப்பு சுவையுடைய இந்த நெல்லிக்காய் வைட்டமின் சி அடங்கிய உணவாகும். 100 கிராம் நெல்லிக்காயில் 27.7 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம், ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன.

மாம்பழம்

சீசன் வகை பழங்களில் மாம்பழம் எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான பழமாகும். 1 கப் மாம்பழத்தில் 76% வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து களும் இதில் உள்ளன. எனவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

 

Related posts

தெரிஞ்சிக்கங்க…பீர்க்கங்காயை சாப்பிடுவதால் என்ன மாதிரியான நோய்கள் குணமாகிறது தெரியுமா?

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! சளியைப் போக்கும் மிளகு ரசம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நூறு மருத்துவர்களுக்கு சமமான இஞ்சி… எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தலாம்?

nathan

சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்

nathan

செரிமான பிரச்சனையை குணமாக்கும் அப்ரிகாட் பழம்

nathan

உங்களுக்கு தெரியுமா மெகா சைஸ் தொப்பையைக் கூட ஒரே வாரத்தில் கரைக்கும் புளியம்பழ ஜூஸ்…

nathan

குழந்தைகளுக்கும், கருவுற்ற தாய்மார்களும் பச்சை பட்டாணியை சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?

nathan

உண்ணும் உணவு ஜீரணமாக மூன்று வழிகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி தோசை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan