ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பரான எனர்ஜியூட்டும் வித்தியாசமான எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இதனை கோடையில் அதிகம் உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய எனர்ஜி கிடைத்து, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதிலும் அதனை ஜூஸ் போட்டு குடித்தால், அதன் சுவையே தனி. பொதுவாக அனைவருக்கும் எலுமிச்சை ஜூஸ் போடத் தெரியும்.

ஆனால் அந்த எலுமிச்சை ஜூஸை இன்னும் வித்தியாசமான சுவையில் செய்து சாப்பிட வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்து குடியுங்கள். மேலும் இங்கு இந்த ரெசிபியின் செய்முறையும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை – 4

உப்பு – 1 டீஸ்பூன்

சர்க்கரை – 2 டீஸ்பூன்

ப்ளாக் சால்ட் – 1/2 டீஸ்பூன்

சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

சோடா பவுடர் – 1 டீஸ்பூன்

ஐஸ் கட்டிகள் – 4-6

தண்ணீர் – 4-5 டம்ளர்

செய்முறை:

முதலில் எலுமிச்சைகளை இரண்டாக வெட்டி, அதில் உள்ள விதையை நீக்கிவிட்டு, பின் அதில் உள்ள சாற்றினை பிழிந்து எடுக்க வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் ஊற்றி, அத்துடன் சர்க்கரை மற்றும் உபுப சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ப்ளாக் சால்ட், சீரகப் பொடி மற்றும் தண்ணீர் ஊற்றி, மிக்ஸியை மூடி ஒரு அடி அடித்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் அதனை டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, அதில் சோடா பவுடர் சேர்த்து பருகினால், வித்தியசமான சுவை கொண்ட எலுமிச்சை ஜூஸ் ரெடி!!!

Related posts

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! சமையல் டிப்ஸ்!

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும்?

nathan

தெரிந்துகொள்வோமா? மிகப்பெரிய பாதிப்புக்கள் அஜினமோட்டோ ஏற்படுத்தும்

nathan

அசிடிட்டி பிரச்சனையா?

nathan

மரணம் ஏற்படப் போகிறது என காகம் உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

உங்க காதலரிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் மோசமான ஒருவரை காதலிக்கிறீங்கனு அர்த்தமாம்!

nathan

இயற்கையாக குறட்டைக்குத் தீர்வுகாண எளிய வழிகள்…

sangika

கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே…! ((Don’t go for Soft Drinks in Summer..!)…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஆபத்தில் உதவும் தற்காப்பு முறைகள்

nathan