37.9 C
Chennai
Monday, May 12, 2025
ytuytu
பிற செய்திகள்

விவேக்கின் மறைவு கேட்டு கண்ணீர் மல்க இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் வடிவேலு.

விவேக் உடன், ‛‛நந்தவன தேரு, விரலுக்கேத்த வீக்கம், மிடில்கிளாஸ் மாதவன், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” உள்ளிட்ட பல படங்களில் நடிகர் வடிவேலு நடித்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்கள். விவேக்கின் மறைவு கேட்டு கண்ணீர் மல்க இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் வடிவேலு.

அதில் அவர் கூறுகையில், ‛‛என் நண்பன் விவேக் ஹார்ட் அட்டாக்கினால் இறந்துட்டான் என்று இன்றைக்கு காலையில் செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். அவனும், நானும் நிறைய படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளோம். விவேக்கை பற்றி பேசும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. ரொம்ப நல்லவன், உதவும் எண்ணம் கொண்டவன். ஐயா அப்துல் கலாம் உடன் நெருக்கமாக இருப்பான். விழிப்புணர்வு, மரம் நடுவது என எவ்வளவோ விஷயம் பண்ணுவான். இரண்டு பேரும் உரிமையோடு என்னடா வடிவேலு, விவேக் என்று பேசிக் கொள்வோம். அவனை மாதிரி ஒளிமறைவு இல்லாமல் பேசக்கூடிய ஆளே கிடையாது.
ytuytu
கோடிக்கணக்கான ரசிகர்களில் அவன் எனக்கு ஒரு ரசிகன். நான் அவனுக்கு ரசிகன். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதியுற மாதிரியே இருக்கும். என்னைவிட எதார்த்தமாக, எளிமையாகப் பேசுவான். அவனுக்கு இப்படியொரு மரணம் என்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்னால் முடியல, இந்த நேரத்தில் என்ன பேசுவது என்றே தெரியல. அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. நான் மதுரையில் என் அம்மா உடன் இருக்கிறேன். என் நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விவேக் குடும்பத்தினர் தைரியமாக இருக்க வேண்டும். அவன் எங்கும் செல்லவில்லை, உங்களுடன் தான் இருக்கிறான், மக்களோடு மக்களாக நிறைந்திருக்கிறான். அவனுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும்”.

Related posts

நல்லா காத்து வாங்குறீங்க.. வேற லெவல் போட்டோ!

nathan

ஒரே நாள்ல சரியாயிடும்..!! முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க…

nathan

போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்.. ரசிகர் ஒருவர் ‘மேடம், பிளீஸ் உங்களது வாட்ஸ் ஆப் நம்பரைக் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்.

nathan

தற்போது தனி ஆளாக அசத்தலாக கெத்து காட்டும் ஆலியா மானசா!

nathan

நடிகை நிஷா இன்ஸ்டாகிராம் பதிவில் உருக்கம் “என் வாழ்வில் ஈடு இணை இல்லாத ஒருவரை நான் இழந்துவிட்டேன்”

nathan

முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு…

nathan

மாடர்ன் உடையில் பயங்கர மேக்கப்புடன் நபர் ஒருவருடன்,, தாடி பாலாஜி மனைவி நித்யா…

nathan

அடேங்கப்பா! க்யூட்டாக கதக் கற்கும் அசின் மகள்…

nathan

சஞ்சீவ் திடீரென்று ஏமாத்தி தான் தாலி கட்டுனாரு.. ஆலியா மனசா

nathan