கிராம்பு ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மருந்து பொருளாகவும், சமையலில் நறுமணப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கிராம்பு சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிப்பிலும் கிராம்பு முக்கிய பொருளாக சேர்க்கபடுகிறது. மேலும் வாசனைத் திரவியங்கள், சோப்புத் தயாரிப்பிலும் கிராம்பு பயன்படுகிறது.
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
அதிலும் தினமும் ஒருவர் கிராம்பை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். தற்போது அந்த நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- கிராம்பு உடலில் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இது நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதோடு இவற்றில் வைட்டமின் சி-யும் உள்ளன.
- கிராம்பு செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிப்பதால், செரிமான பிரச்சனைகளை போக்க பழங்காலம் முதலாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் கிராம்பு குமட்டலையும் குறைக்கும்.
- கிராம்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கும். செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க கிராம்பை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது கிராம்பு பொடியை தேனில் கலந்து சாப்பிடலாம்.
- கடுமையான பல் வலி இருந்தால் வலியுள்ள இடத்தில் கிராம்பை வைத்து கடித்தால், பல் வலியால் சந்திக்கும் அசௌகரியங்களில் இருந்து விடுபடலாம்.
- தினமும் 2 கிராம்பை வாயில் போட்டு மெல்லுவதன் மூலம், அதில் உள்ள யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, கல்லீரலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.
- தலைவலியை போக்க கிராம்பை உட்கொள்ளலாம் அல்லது கிராம்பு எண்ணெயை தலைவலியுள்ள இடத்தில் தடவலாம். நீங்கள் கிராம்பை சாப்பிடுவதாக இருந்தால், கிராம்பு பொடி மற்றும் கல் உப்பை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடிக்க, வலியில் இருந்து விடுபடலாம்.
- மேற்பூச்சாக பயன்படுத்த விரும்பினால், கிராம்புகளை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை நெற்றிப் பகுதியில் தடவி மசாஜ் செய்தால் நிவாரணம் கிடைக்கும்.
- கிராம்பு மூட்டுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இந்த உட்பொருட்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதோடு, எலும்பு திசுக்களின் உருவாக்கத்திற்கும், எலும்புகளுக்கு ஆரோக்கியமான கனிமங்களை பரிமாற்றம் செய்வதற்கும் உதவுகின்றன.
- துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், தினமும் 2 கிராம்பு சாப்பிடுங்கள். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன.
- கிராம்பு கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் தமனிகளின் செயல்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும். முக்கியமாக வாழ்நாளை நீட்டிக்கும்.
- இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்களுக்கு கிராம்பு மிகவும் நல்லது. ஏனெனில் கிராம்பு உடலினுள் இன்சுலின் போன்று செயல்படும்.
- இவை இரத்தத்தில் இருந்து அதிகப்படியான சர்க்கரையை உயிரணுக்களில் ஏற்றுமதி செய்ய உதவுகின்றன, சமநிலையை மீட்டெடுக்கின்றன. மேலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கி உதவுகின்றன.
- கிராம்பில் உள்ள யூஜேனோல் இரத்த உறைவைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது. ஆனால் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவர்கள் கிராம்பை உட்கொள்ளக்கூடாது.