மனிதர்களுக்கு அவர்களின் அன்றாட பழக்கவழக்கங்களே, அவர்கள் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக வகிக்கிறது. இப்படி பல பழக்கவழக்கங்களைத் தான் நாம் அன்றாடம் பின்பற்றுகிறோம்.
ஆனால் அனைத்து பழக்கவழக்கங்களும் ஆரோக்கியமானதல்ல. நீங்கள் நினைப்பதை விட சில பழக்கவழக்கங்கள் நமக்கு தீங்கை விளைவிக்கும். அது உங்களை அழிக்கிறது என்பது கூட உங்களால் உணர முடியாமல் போகலாம்.
இப்படி நம்மை அழிக்கும் சில அன்றாட பழக்கவழக்கங்களைத் தான் இங்கு விவரித்துள்ளோம். இவைகளை படித்து தெரிந்து கொண்டு, முடிந்த வரை இவைகளை தவிர்த்து வந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்திடலாம்.
முடியை காய வைத்தல்
தலை முடியை காய வைக்க ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது தவறாகும். வெப்பத்தால் உங்கள் முடியில் ஹைட்ரஜன் உருவாகி, அதனால் தலை முடி பாதிக்கப்பட்டு, முடிக்கொட்டுதல் ஏற்படலாம்.
கணிப்பொறி பயன்படுத்துதல்
கணிப்பொறி பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்கும். திரையின் வெளிச்சம் கண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி தலைவலியை உண்டாக்கும். சில கணிப்பொறியில் நச்சுப் பொருட்களும் உள்ளன. இது உங்கள் நரம்பு அமைப்பையும் பாதிக்கும்.
பென்சில் கடிப்பது
பென்சில் கடிப்பது பாதுகாப்பானது அல்ல. பென்சில் மற்றும் பேனா கடிப்பதால் உங்கள் பற்கள் பாதிக்கப்படும் அல்லது பற்களின் அமைப்பு இடம் மாறும்.
சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் போதல்
சன்ஸ்க்ரீன் போடாமல் வெளியே சென்றால், அது உங்கள் சருமத்தை பாதித்துவிடும். சன்ஸ்க்ரீன் போடுவதால் சருமத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் தீமையான புறஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாது, உங்கள் சருமத்தை இளமையுடனும் காட்ட உதவும்.
தினமும் தலைக்கு குளித்தல்
தினமும் வெந்நீரில் தலைக்கு குளித்து, உடலை தேய்த்து குளிக்க உதவும் ஸ்கரப்பரைப் பயன்படுத்தினால், சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவும். மேலும் அது உங்கள் சருமத்தின் கொழுப்பு அமிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைய வைக்கும்.
அதிகரிக்கும் ஜாக்கிங்
ஜாக்கிங் அதிகரித்தால் கீல்வாதம் ஏற்படும் இடர்பாடு உண்டாகும்; குறிப்பாக முட்டியில் தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
எலுமிச்சையை உண்ணுவது
எலுமிச்சை உண்ணுவது அவ்வளவு பெரிய தவறில்லை. ஆனால் எலுமிச்சையில் உள்ள அமிலம், ஆரோக்கியமான வாய்க்கு அதிமுக்கியமான உங்கள் பற்களின் எனாமலை அரிக்கும்.
பாப்கார்ன் பற்களை பாதிக்கும்
பாப்கார்ன் உங்கள் பற்களுக்கு இடையே மாட்டிக்கொள்ளும். இதனால் பற்களில் தொற்றுக்கள் ஏற்படும். உங்கள் பற்கள் வலுவில்லாமல் இருந்தால், பாப்கார்ன் விதைகள் உங்கள் பற்களில் பிளவை உண்டாக்கலாம்.
அலுவலகத்தில் அமர்வது
தொடர்ச்சியாக 6 மணிநேரத்திற்கு மேலாக தினமும் வேலை பார்த்தால், இதய நோய் வருவதற்கான இடர்பாடு 64 சதவீதமாக உள்ளது.
படுக்கையில் சாக்ஸ் அணிவது
இரவில் படுக்கையில் படுக்கும் போது சாக்ஸ் அணிந்தால், உடலில் ஏற்படும் வாய்வு பரிமாற்றம் தடுக்கப்படும். இதனால் சரும அணுக்கள் பாதிப்படையும். இதனோடு சேர்ந்து மூளை அணுக்களும் பாதிக்கப்படும்.