29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.80 9
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.

அசைவ உணவு வகைகளில் புரத சத்து அதிகம் உள்ளது. உடலின் இயக்கம் சீராக நடைபெறுவதில் புரதத்தின் பங்களிப்பு முக்கியமானது. விலங்குகளில் உள்ள புரதங்களில் அனைத்து விதமான அமினோ அமிலங்களும் இருக்கின்றன.

அவை உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றன. ஆனால், தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதங்களில் அவற்றின் அளவு குறைவாகவே இருக்கும்.

மேலும், உடலில் புரதத்தின் அளவு குறையும்போது உடல் பலவீனம், கவனக்குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

இதனையடுத்து, ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றில் இரும்பு சத்து அதிகமிருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மூளையின் சீரான செயல்பாட்டுக்கும் இரும்பு சத்தின் பங்களிப்பு இன்றியமையாதது.

அசைவ உணவு வகைகளில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எலும்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான கால்சியம் சைவ உணவை விட, அசைவ உணவு வகைகளில் அதிகம் கலந்திருக்கும்.

எனவே, அசைவ உணவு சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது சைவ உணவு சாப்பிடுபவர்கள்தான் கால்சியம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இரும்பு, கால்சியம் தவிர அசைவ உணவுகளில் துத்தநாகம், செலினியம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன.

அவை உடலின் பல்வேறு பாகங்களின் சீரான செயல்பாட்டிற்கு இன்றியமையாதவை. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு கொண்டவர்கள் அசைவ உணவை தவிர்க்கக்கூடாது.

அசைவ உணவு சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது சைவ உணவு சாப்பிடுபவர்கள்தான் கால்சியம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

இரும்பு, கால்சியம் தவிர அசைவ உணவுகளில் துத்தநாகம், செலினியம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு கொண்டவர்கள் அசைவ உணவை தவிர்க்கக்கூடாது.

அதேவேளையில் அசைவ உணவை சாப்பிடுவதால் பக்கவிளைவுகளும் ஏற்படத்தான் செய்கின்றன. அதாவது இறைச்சி உணவு வகைகளை அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அசைவ உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். ஏனெனில் அசைவ உணவு வகைகளில் கலந்திருக்கும் அதிகமான புரதத்தை ஜீரணிப்பது செரிமான அமைப்புக்கு கடினமான பணியாகும். தொடர்ச்சியான அசைவ உணவு பழக்கம் ஆயுட்காலத்தை குறைத்துவிடும்.

உடல் பருமன் பிரச்சினையையும் உருவாக்கும். அதனால் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதற்கு அடிமையாகிவிடாமல் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

Related posts

வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

nathan

சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம்

nathan

உண்ணும் உணவு ஜீரணமாக மூன்று வழிகள்

nathan

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்காத பயன்கள்:

nathan

கர்ப்ப காலத்தில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிறந்த சிகிச்சை

nathan

வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…மலச்சிக்கல், வயிற்றுப் புழு, மற்றும் “மரு” போன்றவற்றிக்கு உடனடி தீர்வு இதோ…!!

nathan

சுவையான வாழைப்பழ முட்டை தோசை

nathan

வீட்டில் இதெல்லாம் இருக்கா? அப்போ உங்க கண்ணு சூப்பரா இருக்கும்!

nathan