28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
zodiac signs 15
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…ராசிப்படி உங்களுக்கு எத்தனை குழந்தை பிறக்கும் தெரியுமா?

ஒருவருக்கு எத்தனைக் குழந்தை பிறக்கும் என்பதைக் கணிப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அதில் பரலவாக பலரும் கணித்துக் கூறும் ஓர் வழி கைரேகையைப் பார்த்து கூறுவது. கைரேகை ஜோதிடத்தின் படி, கைகளில் உள்ள குறிப்பிட்ட ரேகையைப் பார்த்து, எத்தனை குழந்தை பிறக்கும் என்பதை கணித்துக் கூற முடியும்.

அதேப் போல் ஒருவரது ராசியைக் கொண்டும் அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது என்பதையும் கணிக்க முடியும். இக்கட்டுரையில் நாம் பார்க்கவிருப்பது, எந்த ராசிக்காரர்களுக்கு எத்தனை குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து தான். அதைப் படித்து உங்களுக்கு எத்தனை குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக ஜோதிடம் கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: இந்த கணிப்புகள் ஜோதிட காரணிகளைக் கொண்டு கணிக்கப்படுவதாகும். வேண்டுமானால் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வேறுபடலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்களுக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாம். இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாக இருப்பதால், உங்கள் குழந்தைகளின் மீது அலாதியான பிரியம் கொண்டவர்களாக இருப்பர்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு, இரண்டு குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்கள் போதுமான பொறுமைசாலியாக இருப்பதோடு, நல்ல பெற்றோருக்கான பண்புகளையும் கொண்டவர்களாக இருப்பதால், குழந்தைகளை சாமர்த்தியமாக வளர்ப்பதோடு, தங்கள் வாழ்க்கையை நன்கு என்ஜாய் செய்வார்கள்.

மிதுனம்

ஜோதிடத்தின் படி, மிதுன ராசிக்கார்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது. எத்தனை முறை கருத்தரித்தாலும், இந்த ராசிக்கார்களுக்கு இரட்டையர்கள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது.

கடகம்

கடக ராசிக்காரர்களைப் பொறுத்த வரை, இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. அதுவும் இந்த ராசிக்காரர்களுக்கு பல வருடங்களுக்குப் பிறகு தான் குழந்தைகள் பிறப்பார்களாம். இருப்பினும் இந்த ராசிக்காரர்களிடம் ஆழமான தாய்மை உணர்வு மற்றும் பெற்றோருக்குரிய அன்பு அதிகமாகவே இருக்குமாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இரண்டு அல்லது நான்கு குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. இந்த ராசிக்காரர்கள் பல்வேறு செயல்களை ஒரே நேரத்தில் பொறுமையாக செய்து முடிக்கக் கூடியவர்கள். எனவே இவர்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும், சாந்தமாக குழந்தைகளை வளர்ப்பார்களாம். இந்த ராசிக்கார்களிடமும் தாய்மை உணர்வு அதிகம் இருப்பதோடு, சுதந்திரமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.

கன்னி

கன்னி ராசிக்கார்களுக்கு ஒரே ஒரு குழந்தை தான் பிறக்க வாய்ப்புள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு ஒரே ஒரு குழந்தை தான் சரியாகவும் இருக்கும். ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் அதிக பதற்றம் மற்றும் பல விஷயங்களை நினைத்து கவலை கொள்வதோடு, அனைத்தையும் போது தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வார்களாம். மேலும் இந்த ராசிக்காரர்கள், தங்களுக்கு ஒரு குழந்தையே போதும் எனவும் நினைப்பார்களாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சமநிலை, நேர்மை மற்றும் சமத்துவத்தை நேசிப்பவர்களாக இருப்பர் என ஜோதிடம் கூறுகிறது. அதோடு இந்த ராசிக்காரர்களுக்கு இரட்டைப் படை எண்ணிக்கையில் தான் குழந்தைகள் இருப்பார்களாம். அதாவது இரண்டு, நான்கு, ஆறு என!

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் குழந்தைகளைக் கொண்டே படையை உருவாக்க நினைப்பார்களாம். அதாவது இந்த ராசிக்கார்களுக்கு நிறைய குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. இந்த ராசிக்காரர்கள் சற்று முன்கோபம் கொண்டவர்களாக இருந்தாலும், கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதற்கேற்ப, இவர்கள் அதிக பாசம் மற்றும் அன்பைக் கொண்டவர்களாக இருப்பர்.

தனுசு

தனுசு ராசிக்கார பெண்களுக்கு ஒரே குழந்தை அல்லது குழந்தையே பிறக்காமலும் போகலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. இந்த ராசிக்காரர்கள் மிகவும் சாந்தமானவர்கள். ஆனால் இந்த ராசிக்கார்களது துணிச்சல் தன்மை இவர்களை ஒரே இடத்தில் இருக்க விடாமல் செய்து, இதன் விளைவாக தாய்மை அடைவதில் பெரும் பிரச்சனையை சந்திக்க வைக்குமாம்.

மகரம்

மகர ராசிக்கார்களுக்கு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுப்பார்களாம். மேலும் இந்த ராசிக்காரர்களும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடிக்கக்கூடியவர்களாவும் இருப்பார்கள். அதாவது மூன்று சிறிய குழந்தைகளை இவர்களிடம் கொடுத்தாலும், இவர்கள் குழந்தையையும் வீட்டையும் சிறப்பாக பராமரிப்பார்களாம்.

கும்பம்

தனுசு ராசிக்காரர்களைப் போன்றே கும்ப ராசிக்கார்களும் துணிச்சலானவர்கள். இவர்களிடம் இருக்கும் குழந்தைத்தனமான குணம், இவர்களை தாய்மையை அடையவதில் பெரும் சிக்கலை உண்டாக்கும் என ஜோதிடம் கூறுகிறது. இருப்பினும் இந்த ராசிக்கார்களுக்கு ஒரே ஒரு குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளதாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களிடம் குழந்தை பெற்றெடுப்பதில் போட்டிப் போட்டால், இவர்களை மிஞ்ச முடியாது. ஏனெனில் இந்த ராசிக்காரர்களுக்கு 5 குழந்தைகளுக்கும் அதிகமாக குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளதாம். இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் குழந்தைகளின் மீது அலாதியான அன்பு மற்றும் பிரியம் கொண்டவர்களாக இருப்பர்.

Related posts

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு சாத்துக்குடி சாப்பிடுவதினால் கிடைக்கும் பலன்கள்!

nathan

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்

nathan

ஆரோக்கியத்திற்கு தீங்காகும் அழகு சாதனப் பொருட்கள்!

nathan

கையெழுத்து சொல்லும் ரகசியம்

nathan

தெரிந்துகொள்வோமா? கோடையில் உயிரைப் பறிக்கும் நோய்கள்

nathan

கர்ப்பமாக நினைக்கும் பெண்களுக்கு! கருமுட்டை வெளிப்படுவதற்கான முக்கிய அறிகுறிகள்

nathan

இந்த 5 ராசிக்காரங்க காதலில் ஈஸியா ஏமாந்துறுவாங்களாம்…

nathan

இந்த 5 ராசிக்காரங்க அசைக்க முடியாத மனவலிமை உள்ளவங்க…

nathan

இத படிங்க எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

nathan