31.7 C
Chennai
Saturday, Jun 1, 2024
சைவம்

சுவையான கேரட் பொரியல்

கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. அதிலும் அந்த கேரட்டை பச்சையாக சாப்பிடுவது இன்னும் சிறந்தது. ஆனால் அந்த கேரட்டை தேங்காய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். மேலும் இந்த சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும்.

இங்கு கேரட் பொரியலை எளிமையான செய்முறையில் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்:

கேரட் – 4-5

தேங்காய் – 1/2 கப் (துருவியது)

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் கேரட்டை நன்கு நீரில் கழுவி, துருவி அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டூம்.

பின்பு அதில் கேரட்டை சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

பிறகு தண்ணீரானது முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், கேரட் பொரியல் ரெடி!!!

Related posts

கொத்தவரங்காய் பொரியல்

nathan

ஆஹா பிரமாதம்! சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!

nathan

வாழைப்பூ துவட்டல்

nathan

பூரிக்கு சூப்பரான சைடுடிஷ் வடகறி

nathan

பேச்சுலர் சாம்பார்

nathan

ஸ்பைசி கார்ன் சாட்

nathan

காலிஃபிளவர் கேரட் புலாவ்

nathan

மாங்காய் சாதம்

nathan

சுவையான செட்டிநாடு பலாக்காய் கறி

nathan