25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.053.800.9 6
மருத்துவ குறிப்பு

கொலஸ்ட்ரால் வேகமாக குறையும்! இந்த அற்புத உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க…

பொதுவாக மனித உடலுக்குக் கொழுப்புச்சத்து தேவையானதும் முக்கியமானதாகும். ஆனால், அதன் அளவு கொஞ்சம் அதிகமானாலும் உடலுக்கு ஏற்படுவது பிரச்சனையே தான்.

உடலில் அதிகமான கெட்ட கொழுப்பு சேர்ந்தால், நெஞ்சு வலி அல்லது இதய வலி, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் நீரிழிவுக்கு காரணமாக அமைகின்றது.

இதற்கு முக்கிய காரணமே கொழுப்பு மிகுந்த உணவுப் பழக்கம், உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாத ஒரு வாழ்க்கைமுறை ஆகியவை ஆகும்.

இதிலிருந்து விடுபட வேண்டுமாயின் ஆரோக்கியமனான உணவுகளை தேர்ந்தெடுப்பது நல்லதாகும்.

அந்தவகையில் தற்போது கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் சில உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்துவிடும்.
  • கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.
  • மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.
  • தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.
  • நட்ஸில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளாதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
  • வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
  • ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.
  • முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
  • சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
  • பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
  • சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.
  • பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.
  • வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
  • ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும்.
  • சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.
  • பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லாவிட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.
  • மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை.
  • மார்கரைன் இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.
  • அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மைக் கொண்டது.

Related posts

தலையில் அரிப்பா? குணப்படுத்த ஈஸி வழிகள்!!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தோல் நோய்களை குணப்படுத்தும் புங்கை!

nathan

குழந்தைகளுக்கு ஆபத்தாகும் இன்டர்நெட்

nathan

காக்காய் வலிப்பு வரக்காரணம் – தடுக்கும் வழிமுறைகள்

nathan

அடேங்கப்பா! உடல் நலத்தை காக்கும் செம்பருத்தி பூ; எப்படி தெரியுமா…?

nathan

தெரிஞ்சிக்கங்க… ஓயாத விக்கலா இதோ சித்த மருத்துவத்தில் உடனடி தீர்வு

nathan

மலச்சிக்கலைப் போக்கும் மலைவாழைப்பழம்!

nathan

பெண்களே உங்களுக்கு ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க ஆசையா?

nathan

கருத்த‍டை மாத்திரைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் பழக்க‍ம் வழக்கம் ஆக்கி கொண்டீர்களா?

sangika