பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதற்கு நிறைய காரணம் இருக்கின்றன. அதில் முதன்மையாக கருதப்படுபவை, மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள், கருப்பைக் கோளாறுகள், கருப்பை வலு போன்றவை ஆகும்.
இது சார்ந்த பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே சிறந்த தீர்வளிக்க கூடியவை ஆகும். நாம் மறந்த சில இயற்கை மூலிகை செடிகள் இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கிறது என்று இயற்கை மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். அவற்றில் சிலவற்றை பற்றி இனிக் காணலாம்….
மாதவிடாய் கோளாறு குறைய
வெள்ளறுகுச் செடியை தேவையான அளவு எடுத்து மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் எலுமிச்சை அளவு அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் குறையும்.
கருப்பைக் கோளாறுகள்
குறைய அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து அருந்தி வந்தால் கருப்பைக் கோளாறுகள் குறையும்.
கருப்பை வலுப்பெற
அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு இரவு உணவுக்கு பின் குடித்து வர கருப்பை வலுப்பெறும்.
கருப்பை வலுப்பெற
தேங்காய் குரும்பலை அரைத்து சாப்பிட்டு வர கருப்பை வலுப்பெறும் என்று கூறப்படுகிறது.
முக்கிய அறிவிப்பு
அமிர்தமாகவே இருந்தாலும் அது சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கக் கூடும். எனவே, முதலில் தகுந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொண்டு மற்றும் இது உங்களுக்கு எந்த விதத்திலும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்துக் கொண்டு பயன்படுத்துங்கள்.